
நேபாளம் இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு தனி நாடாகும்.
தெற்காசியாவில் உள்ள இந்நாட்டின் வடக்கில் மக்கள் சீன குடியரசும் தெற்கு, மேற்கு மற்றும் கிழக்குத் திசைகளில் இந்தியாவும் அமைந்துள்ளன. நேபாளம் பொதுவாக இமாலய இராச்சியம் என்று அழைக்கப்படுகிறது. கௌதம புத்தர் பிறந்த லும்பினி நகரம் நேபாள-இந்தியா எல்லையில் உள்ளது.
14வது நூற்றாண்டில் நாடு, காட்மாண்டூ, பதான், பக்தபூர் என மூன்றாக பிளவுபட்டது. ஒரு நல்ல சுற்றுலா தளமாகும்.
உலகப் பாரம்பரியக் களங்கள் நேபாளத்தில் எட்டு கலாச்சார பண்பாட்டு உலகப்பாரம்பரியக் களங்களும், இரண்டு இயற்கை உலகப்பராம்பரியக் களங்களும் அமைந்துள்ளது..
அனுமன் தோகா நகர சதுக்கம்
பக்தபூர் நகர சதுக்கம்
பதான் தர்பார் சதுக்கம்
பசுபதிநாத் கோவில்
சங்கு நாராயணன் கோயில்
பௌத்தநாத்து
சுயம்புநாதர் கோயில்
லும்பினி
சித்வான் தேசியப் பூங்கா
சாகர்மாதா தேசியப் பூங்கா
சுற்றுலா மற்றும் ஆன்மிகத் தலங்கள்
ஆன்மிகத் தலங்கள்
இந்துக்களின் ஆன்மிகத் தலமாக புகழ் பெற்ற பசுபதிநாத் கோவில், சங்கு நாராயணன் கோயில் மற்றும் முக்திநாத் விளங்குகிறது. பௌத்தர்களின் புனித தலங்களாக லும்பினி, பௌத்தநாத்து மற்றும் கபிலவஸ்து உள்ளது.
சுற்றுலாத் தலங்கள்;
எவரெஸ்ட் சிகரம், கஞ்சன்சுங்கா மலை, அன்னபூர்ணா மற்றும் தவளகிரி மலைகள் மற்றும் மலையேற்ற வீரர்களையும், சித்வான் தேசியப் பூங்கா, சாகர்மாதா தேசியப் பூங்கா சுற்றுலாப் பயணிகளையும் மிகவும் ஈர்க்கும் இடங்கள் ஆகும்.
சங்கு நாராயணன் கோயில்; (Changu Narayanan Temple)
நேபாள நாட்டின் பக்தபூர் மாவட்டத்தில் தவளகிரி மலைப்பகுதியில் சங்கு என்ற கிராமத்தில் அமைந்த பண்டைய இந்து சமயக் கோயிலாகும். காத்மாண்டு சமவெளியில் உள்ள காத்மாண்ட் நகரத்தின் கிழக்கில் இருபது கிலோ மீட்டர் தொலைவிலும், பக்தபூர் மாவட்டத் தலைமையிடமான பக்தபூர் நகரத்திற்கு வடக்கே ஏழு கிலோ மீட்டர் தொலைவிலும் சங்குநாராயாணன் கோயில் அமைந்துள்ளது.
இக்கோயில் திருமாலுக்கு அமைக்கப்பட்டதாகும். நேபாளத்தில் இக்கோயில் மிகப் பழமையானதாக கருதப்படுகிறது. இக்கோயில் அருகே மனோகரா ஆறு பாய்கிறது. யுனேஸ்கோவால் அங்கீகரிப்பட்ட உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக சங்கு நாராயணன் கோயில் விளங்குகிறது.
வரலாறு;
இக்கோயில் நேபாள பௌத்த கட்டிடக் கலை வடிவில் கட்டப்பட்டுள்ளது. இந்து புராணங்களின்படி, இக்கோயில் கி மு 325ல் லிச்சாவி வம்ச மன்னர் ஹரி தத்தா வர்மனின் காலத்தில் கட்டப்பட்டதாக அறிய முடிகிறது. மன்னர் மனதேவனின் ஆட்சிக் காலமான கி பி 496 முதல் 524 முடிய, இங்குள்ள தரை தளத்தில் அமைந்த கல் தூண்களில், அவனது படையெடுப்புகள் குறித்து எழுதப்பட்டுள்ளது. 1585 முதல் 1614 வரை ஆட்சி செய்த சிவ சிம்ம மல்ல அரசனின் பட்டத்தரசி கங்காராணி என்பவர் இக்கோயிலை புதுப்பித்து கட்டினார். இக்கோயிலின் கதவுகள், ஜன்னல்கள் மற்றும் கூரைகள் தங்கம் கலந்த செப்புத்தகடுகள் 1708இல் மன்னர் பாஸ்கர மல்லர் வேய்ந்தான்.
சிறப்புகள்;
மலை உச்சியில் அமைந்த சங்கு நாராயணன் கோயிலைச் சுற்றிலும் உள்ள காடுகளில் செண்பக மரங்கள் வளர்ந்துள்ளது. இக்கோயிலுக்குச் செல்லும் வழியில் கல்லால் ஆன குடிநீர் குழாய், லிச்சாவியர்கள் காலத்திலிருந்தே இருப்பதாக கருதப்படுகிறது. நேவார் இன மக்கள் இக்கோயிலைச் சுற்றிலும் வாழ்கின்றனர். இக்கோயிலால் இப்பகுதியில் சுற்றுலாத் துறை வளர்ந்துள்ளது.
கலை மற்றும் கட்டிடக்கலை;
நேபாள நாட்டில் சங்கு நாராயணன் கோயில் மிகப் பழமையானதாக கருதப்படுகிறது. இரண்டடுக்கு கொண்ட கருங்கற்களாலான இக்கோயில் பௌத்தக் கட்டிடக் கலை அல்லது இந்து கட்டிடக் கலை வடிவில் அமையாது, பண்டைய நேபாள மரபுப்படி கட்டப்பட்டுள்ளது.
இக்கோயிலைச் சுற்றிலும் திருமாலுக்குரிய சிற்பங்களுடன் அமைந்துள்ளது. முதன்மை கோயிலின் முற்றவெளியில் சிவன், சின்னமஸ்தா, கிருஷ்ணர் கோயில் அமைந்துள்ள இக்கோயிலின் நான்கு வாயில்களில் சிங்கங்கள், சரபங்கள், யானைகள் மற்றும் யாழி சிற்பங்கள் காவலுக்கு உள்ளன.
திருமாலின் பத்து அவதாரங்களைக் குறிக்கும் சிற்பங்கள் கோயிலின் கூரையை தாங்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. மேற்கு வாயிலின் எதிரில் உள்ள தூணில் திருமாலின் ஆயுதங்களான சங்கு, சக்கரம், கட்கம் மற்றும் தாமரை ஆகியவைகளை சிற்பங்களான வடிக்கப்பட்டுள்ளன.








