
பிரதமர் நரேந்திரமோடிக்கு இளைஞர்கள் மத்தியில் நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது. என்றும் இதைக் கண்டு எதிர்க்கட்சி தலைவர் ராகுலுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது என்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திரமோடியால் தொடங்கப்பட்ட போதைப் பொருள் இல்லாத இளைஞர்களுக்கான விக்ஸித்-பாரத்-சங்கல்ப்-அபியா
அப்போது, பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, போதைப்பொருளுக்கு எதிரான இந்தக் கூட்டுப் போராட்டத்தில் இளைஞர்களும் இளம் பெண்களும் இணைவார்கள் என்பதில் நான் முழு நம்பிக்கை கொண்டுள்ளேன்; என்றும், இப்பகுதி முழுவதையும் போதைப்பொருள்,இல்லாததாக மாற்றும் இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் வட மும்பையில் உள்ள நாங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம் என்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
மேலும், பிரதமர் நரேந்திரமோடிக்கு இளைஞர்கள் மத்தியில் நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது. என்றும் இதைக் கண்டு எதிர்க்கட்சி தலைவர் ராகுலுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில், தன்னை ஒரு இளைஞர் என்று காட்டிக் கொள்ளும் ராகுலுக்கு, தற்போது ,ளைஞர்கள் மத்தியில் எந்த ஈர்ப்பும் இல்லை.
இளைஞர்களின் ஆதரவு தொடர்ந்து பாஜகவிற்கே உள்ளது. குறிப்பாக, ஜென்ஸி எப்போதும் எங்களுடனே இருக்கிறார்கள் எனவும், ஜென்ஸி தலைமுறையின் ஆதரவும் இளைஞர்களின் சக்தியும் இல்லாமல் பிரதமரால் மூன்று முறை வெற்றி பெற்றிருக்க முடியாது என்றும், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் பிரதமர் நரேந்திர மோடியுடன் துணை நிற்கிறார்கள் என்பதில் நாங்கள் முழு நம்பிக்கை கொண்டுள்ளோம் என்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.




