
டிட்வா” புயலின் காரணமாக கன மழை பெய்து வரும் நிலையில் களத்தில் தயாராக இருக்குமாறு அதிமுக நிர்வாகிகளிடம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். இதில், “டிட்வா” புயலின் காரணமாக சென்னை, கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்து வரும் நிலையில், பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டார். இதை யடுத்து, புயலின் தீவிரம் உணர்ந்து, அதற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டிருப்பதை உறுதி செய்யுமாறு திமுக அரசை வலியுறுத்தினார். இதை தொடர்ந்து, பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்ள களத்தில் தயாராக இருக்குமாறு அதிமுக நிர்வாகிகளிடம் தெரிவித்தார்.


