NEET UG re-exam results: கருணை மதிப்பெண் விவகாரம்; நீட் மறுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

Advertisements

கருணை மதிப்பெண் வழங்கப்பட்டவர்களுக்கு நடத்தப்பட்ட நீட் மறு தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட்டு உள்ளன.

கடந்த மே மாதம் 5ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் 1563 தேர்வர்களுக்கு நேர இழப்பு காரணமாகக் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து கடந்த 23ஆம் தேதி 1563 மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

1563 மாணவர்களில் 813 மாணவர்கள் மட்டுமே தேர்வில் பங்கேற்றனர். மற்ற 750 மாணவர்கள் பங்கேற்கவில்லை. தேர்வில் பங்கேற்ற மாணவர்களுக்கான தேர்வு மதிப்பெண் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. சத்தீஸ்கர், சண்டிகர், குஜராத், ஹரியானா, மேகாலயா உள்ளிட்ட தேர்வு மையங்களில் மறுத்தேர்வு நடத்தப்பட்டது.

மறு தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்குக் கருணை மதிப்பெண் வழங்கப்படுவதற்கு முன்பு என்ன மதிப்பெண் நீட் தேர்வில் பெற்றனரோ அந்த மதிப்பெண்கள். மட்டுமே மருத்துவ படிப்பு நுழைவுத் தேர்வில் கணக்கில் கொள்ளப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகளை exams.nta.ac.in/NEET எனும் இணையதளத்தில் மாணவர்கள் அறியலாம்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *