
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 108ஆவது பிறந்த நாளையொட்டி நாடாளுமன்றத்தில் உள்ள அவர் உருவப்படத்துக்குத் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் 108ஆவது பிறந்த நாளையொட்டித் தில்லியில் நாடாளுமன்றத்தில் உள்ள அவர் உருவப்படத்துக்கு மாலை போட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே, காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் இந்திரா உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.



