Senthil Balaji case:சிறப்பு நீதிபதி நியமிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோடி செய்ததாகத் தொடர்ந்த வழக்கை ஓராண்டுக்குள் நிறைவு செய்யக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுமீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடந்தது.மனு விசாரணையின்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கச் சிறப்பு நீதிபதியை நியமிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், செந்தில் பாலாஜி வழக்குடன் 23 வழக்குகளை விசாரித்து வருவதாக நீதிபதி அறிக்கை அளித்துள்ளாரென உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்குறித்த அறிக்கையைச் சென்னை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் அடுத்த விசாரணைக்குள் அளிக்க வேண்டும் என்றும் விசாரணையை அக்டோபர் 25ம் தேதிக்கு ஒத்திவைத்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *