NEET exam:தமிழகத்தை தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றிய மேற்கு வங்காளம்!

Advertisements

கொல்கத்தா:நடப்பு ஆண்டில் நடத்தப்பட்ட நீட் தேர்வில் வினாத்தாள் விற்பனை, ஆள் மாறாட்டம், நீட் தேர்வு மையங்களே நீட் முறைகேடுகளை முன்னெடுத்தது என அடுத்தடுத்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. சில ஆயிரம் மாணவர்களுக்கு நீட் தேர்வை நடத்திய தேசியத் தேர்வு முகமை கருணை மதிப்பெண் வழங்கியதும் சர்ச்சையானது.

இதையடுத்து நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. நீட் முறைகேடுகளை முன்வைத்துப் பாராளுமன்றத்தை இந்தியா கூட்டணி கட்சிகள் முடக்கின. டெல்லியிலும் போராட்டங்கள் நடைபெற்றன.

இதற்கிடையே, தமிழ்நாடு சட்டசபையில் நீட் தேர்வுக்கு எதிராக மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரி தமிழ்நாடு சட்டசபையில் தொடர்ச்சியாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்தத் தீர்மானங்களை மத்திய அரசு கிடப்பில் போட்டு வைத்துள்ளது.

இந்நிலையில், மேற்கு வங்காள மாநில சட்டசபையில் நீட் தேர்வுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நீட் தேர்வுக்கு முன் மேற்கு வங்காள மாநில அரசே நடத்திய பொது நுழைவுத் தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, மாநில கல்வி அமைச்சர் பிரத்யா பாசு கூறுகையில், அகில இந்திய அளவில் தேர்வை நடத்துவதற்கு நாங்கள் ஒருபோதும் ஆதரவாக இல்லை. நீட் தேர்வை மத்திய அரசு நடத்தக் கூடாது என அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறியதாகத் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *