PChidambaram:நாட்டின் பணவீக்க பாதிப்பு மத்திய நிதி மந்திரிக்குத் தெரியவில்லை!

Advertisements

பணவிக்கத்தின் பாதிப்பை அறிய கடைக்கோடி கிராமங்களுக்குச் செல்ல வேண்டும் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி:2024-25ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மத்திய பட்ஜெட்டில் பீகார், ஆந்திராவுக்கு அதிக அறிவிப்புகள் இடம்பெற்றன.

அதேவேளை, பட்ஜெட்டில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. குறிப்பாக, பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகள் ஆளும் பீகார், ஆந்திராவுக்கு பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தில் காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி.யும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் பேசியதாவது,

நாட்டில் பணவீக்கம் மிக அதிகமாக இருக்கிறது. இந்தியாவின் கடைக்கோடி கிராமங்களுக்குச் சென்றால்தான் பணவீக்கத்தின் பாதிப்பை அறிய முடியும். பணவீக்கத்தால் ஒவ்வொரு குடும்பமும் பாதிக்கப்பட்டுள்ளது என்பது மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு தெரியவில்லை. பணவீக்கத்தின் பாதிப்பு தெரியாததால்தான் 10 வார்த்தைகளில் நிதி மந்திரி பேசிவிட்டு சென்றார். விலைவாசி உயர்வு மக்களை அதிகம் பாதிக்கிறது. வட்டி விகிதங்கள் ஏன் இன்னும் அதிகமாக உள்ளன?. மேலும் பட்ஜெட் உரையில் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவது குறித்து ஏன் விரிவாக நிதி மந்திரி பேசவில்லை. பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு கவனம் செலுத்தவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *