
யூஜினில் நடைபெற்ற டைமண்ட் லீக் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தி இருக்கிறார்.
உலக தடகள சாம்பியன் பட்டம் வென்ற பின்னரும் நீரஜ் சோப்ராவின் தாகம் தீரவில்லை. யூஜினில் நடைபெற்ற டைமண்ட் லீக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கத்தை வென்று அசத்தி இருக்கிறார்.
இறுதிப்போட்டியில் 83.80 மீட்டர் தூரம் வீசிய நீரஜ் சோப்ரா, இரண்டாவது இடத்தைப் பிடித்தார். முதலிடத்தை செக் குடியரசு நாட்டின் ஜக்கு வட்லெஜ் 84.24 மீத்தூரம் ஈட்டி எறிந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். தொடர்ந்து வெண்கலப் பதக்கத்தை ஃபின்லாந்து நாட்டின் ஆலிவர் ஹெலண்டர் 83.74 மீட்டர் தூரம் எறிந்து கைப்பற்றினார். சூரிச்சில் நடைபெற்ற டைமண்ட் லீக் போட்டியிலும் நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கத்தையே வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.


