Arali flower: லாபம் தரும் அரளி மலர்சாகுபடி!

Advertisements

அரளி மலர் எல்லா வகையான மண்ணிலும் சாகுபடி செய்யலாம். அதுவும் எல்லா காலகட்டத்திலும் சாகுபடி செய்யலாம்…

இவற்றில் சிவப்பு, வெள்ளை மற்றும் ரோஸ் என்று மூன்று நிறங்கள் உள்ளது. ஆனால் விவசாயிகள் பொதுவாக வெள்ளை நிறம் அரளி மலரே தேர்வு செய்கின்றன. இருப்பினும் சந்தையில் அதிகளவு சிவப்பு அரளி மலரே விற்பனை செய்யப்படுகிறது.

இந்த அரளி மலரைச் சாகுபடி செய்வதற்கு அதிகளவு தண்ணீர் செலவாகாது. அதே போல் நிலத்தில் நன்றாக இந்த அரளி செடியைச் சாகுபடி செய்து விட்டோம் என்றால் 25 ஆண்டுகள்வரை செழிப்பாக வளரக்கூடிய பயிராக விளங்குகிறது.

ரோஸ் செடி நல்ல வளர்வதற்கு சில டிப்ஸ்…!

அரளி பூச்சாகுபடிசெய்வதற்கு முன் ஒரு முறை நிலத்தை உழுது நன்றாகச் சமன்படுத்திய பின்பு, வரிசைக்கு வரிசை 10 செ.மீ என்றும், செடிக்குச் செடி 10 செ.மீ என்று ஒரு அடி ஆழத்திற்கு குழிபறிக்க வேண்டும்.
பின்பு குச்சி அல்லது செடியை அந்தக் குழியில் நட வேண்டும். இந்தச் சாகுபடிக்கு குச்சிகளை நடுவது மிகவும் சிறந்த முறையாகும்.

குறிப்பாகக் குச்சிகளைப் பத்தியம் போட்டால் பயிர் நன்றாக வளரும். இந்தச் சாகுபடிக்கு அதிகளவு தண்ணீர் தேவைப்படாது என்பதால் செடிகளை நட்டவுடன் ஒரு முறை தண்ணீர் தெளிக்க வேண்டும். பின்பு வாரம் இரு முறை தண்ணீர் தெளித்தால் போதுமானது.

செண்டு மல்லி பூச்சாகுபடி முறை…!

அரளி பூச்சாகுபடிபொறுத்தவரை ஒரு ஏக்கருக்கு 45 கிலோ தழைச்சத்து, 90 கிலோ மணிச்சத்து, 75 கிலோ சாம்பல் சத்து ஆகிய உரங்களை அடியுரமாக இட வேண்டும்.செடிகளை நட்ட 45 நாட்கள் கழிந்ததும் 45 கிலோ தழைச்சத்து உரத்தினை இட்டு, செடிகளின் வேர் பகுதியில் மண் அணைக்க வேண்டும்.

களை நிர்வாகம்:

அரளி பூச்சாகுபடி பொறுத்தவரை ஆறு மாதத்திற்கு ஒரு முறை களை எடுத்துவிட வேண்டும்.

செடிகளின் நுனி கிள்ளுதல்:

அரளி பூச்சாகுபடி பொறுத்தவரை நடவு செய்த ஆறு மாதங்களில் பயிர்கள் வளரத் துவங்கி விடும்.
செடிகள் நன்றாக வளர்ந்து வரும்போது செடிகளின் நுனிப்பகுதியை அல்லது செடியின் முதல் பூ மொட்டுக்களை கிள்ளி எடுக்க வேண்டும்.இப்படி செடிகளின் நுனியை கிள்ளி விடுவதால் செடிகளில் கிளைகள் அதிகளவு வரும். செடியும் நன்றாக வளரும்.

நன்றாக வளர்ந்த செடிகளில் அதிகளவு மொட்டுகள் பிடிக்க ஆரமித்து விடும். குறிப்பாக மொட்டுகள் மலர்வதற்குள் பறித்து ஒரு பாலீத்தின் கவரில் அடைத்துச் சந்தையில் விற்பனை செய்துவிட வேண்டும் இல்லையெனில் மலர்ந்த மலர்களை விற்பனைக்கு எடுத்துக்கொள்ளமாட்டார்கள். எனவே மொட்டுகள் மலர்வதுக்குள் பறித்துச் சந்தையில் விற்பனை செய்து விட வேண்டும்.இப்படி அரளி பூச்சாகுபடி செய்தால் அதிக லாபம் பெறலாம்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *