தில்லியில் யமுனை ஆற்றில் அபாய அளவைத் தாண்டிய வெள்ளம்..!

Advertisements

அரியானாவில் உள்ள அணையின் மதகுகளைத் திறந்து தண்ணீர் வெளியேற்றப்படும் நிலையில் தில்லியில் யமுனை ஆற்றில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பாய்கிறது.

இமாச்சலம், உத்தரக்கண்ட் மாநிலங்களில் கனமழை பெய்ததால் யமுனை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அரியானா மாநிலத்தில் யமுனை ஆற்றின் குறுக்கே உள்ள அத்தினிக்குண்டு நீர்த்தேக்கம் நிரம்பியது.

இதையடுத்து அணையின் பாதுகாப்புக் கருதி அதன் 18 மதகுகளையும் திறந்து தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.
அத்தினிக்குண்டு அணை திறக்கப்பட்டுள்ளதால் தில்லியில் யமுனை  ஆற்றில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பாய்கிறது.

ஆற்றின் கரையோரப் பகுதிகளில் தண்ணீர் புகுந்துள்ளதால் அப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அப்புறப்படுத்தப்பட்டுப் பாதுகாப்பான வேறிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *