Operation Sindoor : பள்ளி மாணவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் பாடத்திட்டம்!

பள்ளி மாணவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் பாடத்திட்டத்தைத் தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் உருவாக்கி வருகின்றனர்.
பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை வெற்றிகரமாக நடைபெற்றது. இதன் மகத்துவத்தை மாணவர்கள் உணர்ந்து கொள்ளும் வகையில் புதிய பாடத்திட்டத்தைத் தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தேசிய பாதுகாப்பில் ராணுவம், ராஜதந்திரம் மற்றும் அமைச்சகங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு எவ்வாறு பங்கு வகிக்கின்றது.
இதனை மாணவர்களுக்குப் புரிய வைக்கும் நோக்கில்  தயாரிக்கப்படுவதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தனர். மேலும் சிறப்பு பாடத்தொகுதி 2 பகுதியாக உருவாக்கப்படுகிறது. இதில் 3 முதல் 8-ம் வகுப்பு வரை ஒரு பகுதியும், 9 முதல் 12-ம் வகுப்பு வரை மற்றொரு பகுதியும் இருக்கும் என்று தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *