Divya Bharti:செக்கச்சிவந்த ஆடையில் செம்ம அழகு…ரசிகர்களைக் கவர்ந்த திவ்ய பாரதியின் கிளிக்ஸ்!

Advertisements

பேச்சிலர் படத்தில் நடித்துப் பிரபலமான நடிகை திவ்ய பாரதியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஸ் இணையத்தில் படு வைரல் ஆகி வருகிறது.

கோயம்புத்தூரைச் சேர்ந்தவர் திவ்ய பாரதி. இவர் தமிழில் கடந்த 2021-ம் ஆண்டு ரிலீஸ் ஆன பேச்சிலர் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அப்படத்தில் நடிகர் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்திருந்த திவ்ய பாரதி, முதல் படத்திலேயே தன்னுடைய நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார்.

பேச்சிலர் படத்தின் வெற்றிக்குப் பின் நடிகை திவ்ய பாரதிக்கு கோலிவுட்டில் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. அண்மையில் நித்திலன் இயக்கத்தில் வெளிவந்த மகாராஜா என்கிற மாஸ் ஹிட் படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார் திவ்ய பாரதி.

அடுத்ததாக மதில்மேல் காதல், ஆசை ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார் திவ்ய பாரதி. இதில் மதில்மேல் காதல் திரைப்படத்தை வெப்பம் படத்தின் இயக்குனர் அஞ்சனா இயக்கி உள்ளார். இப்படத்தில் பிக்பாஸ் டைட்டில் வின்னர் முகென் ராவுக்கு ஜோடியாக நடித்துள்ளார் திவ்ய பாரதி.

மற்றொரு படமான ஆசை திரைப்படத்தில் கதிருக்கு ஜோடியாக நடித்துள்ளார் திவ்ய பாரதி. இது மலையாளத்தில் வெளிவந்த இஸ்க் திரைப்படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இப்படமும் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதுதவிர கிங்ஸ்டன் என்கிற திரைப்படத்தில் நடிகர் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்தும் வருகிறார் திவ்ய பாரதி.

இப்படி பிசியான நாயகியாக வலம் வரும் திவ்ய பாரதி, இன்ஸ்டாவிலும் விதவிதமாகப் போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களைப் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது செர்ரி பழம்போல் உள்ள செக்கச் சிவந்த ஸ்லீவ் லெஸ் சுடிதார் அணிந்து அதில் அழகு பதுமையாகப் போஸ் கொடுத்துள்ளார். அந்தப் புகைப்படங்களுக்கு லைக்குகளும் குவிந்த வண்ணம் உள்ளன.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *