Today Gold Rate In Chennai: மீண்டும் உச்சம் தொட்ட தங்கம் விலை! ஒரு பவுன் எவ்வளவு தெரியுமா?

Advertisements

தங்கம் விலை சரசரவெனக் குறைய தொடங்கிய நிலையில் கடந்த மூன்று நாட்களாகத் தங்கம் விலை உயர்ந்து வருவது நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் வகிக்கிறது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள்மீதான மோகம் மிகவும் அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில், தங்கம் விலை இரண்டாவது நாளான உயர்ந்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.51,760-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.6,470-க்கு விற்பனையானது.

இன்றைய (ஆகஸ்ட் 13) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.760 உயர்ந்து ரூ.52,520-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.95 உயர்ந்து ரூ.6,565-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 7,020-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.56,160-ஆக விற்பனையாகிறது.

வெள்ளி விலை ஒரு ரூபாய் உயர்ந்து கிராம் வெள்ளி ரூ.88.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.88,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *