
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தென்னிந்திய மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வருகிறார். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் திரைத்துறையில் தொடர்ந்து முன்னணியிலிருந்து வரும் நயன்தாராவின் மார்க்கெட் படத்திற்கு படம் உயர்ந்துகொண்டு தான் இருக்கின்றது. தமிழில் ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நயன்தாரா தற்போது பாலிவுட் படங்களிலும் நடிக்கத் துவங்கியுள்ளார்.
இந்தநிலையில் நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டதாகத் தகவல் ஒன்று பரவியது.
6 வருடங்களாக இருவரும் காதலித்து கடந்த 2022ஆம் ஆண்டுத் திருமணம் செய்துகொண்டார். பின் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளுக்குத் தாய் ஆனார் நயன்தாரா. கணவர், பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக நயன்தாரா வாழ்ந்து வந்த நிலையில், திடீரென இருவரும் விவாகரத்து பெற்று பிரித்துவிட்டார்கள் எனத் தகவல் பரவியது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா இருக்கும் வீடியோ ஒன்று வைரலானது. இதன்மூலம் விக்னேஷ் சிவன் – நயன்தாரா விவாகரத்து சர்ச்சை முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில், நடிகை நயன்தாரா ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் umm.. I’m lost எனப் பதிவு செய்துள்ளார். இதன்மூலம் மீண்டும் இந்த விவாகரத்து சர்ச்சை பரவு துவங்கிவிட்டது.
விவாகரத்து சர்ச்சைகுறித்த பதிவா இது, அல்லது ஏதேனும் படம் அல்லது விளம்பர படம்குறித்து பதிவா இது என்றும் ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.

