புதுடில்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை ஏப்.,15 வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கக் கோர்ட் உத்தரவிட்டது. இதனையடுத்து அவர் திகார் சிறையில் 2ம் எண் அறையில் அடைக்கப்பட்டார்.
புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21ம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது. அவரை டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய அமலாக்கத்துறை, 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கக் கோரியிருந்தது. இதனையடுத்து ஏப்ரல் 1ம் தேதிவரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.
அமலாக்கத்துறையின் காவல் இன்றுடன் முடியும் நிலையில், இன்று ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அரவிந்த் கெஜ்ரிவாலை ஏப்.,15 வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு 2ம் எண் அறை ஒதுக்கப்பட்டது. சிறையில் பகவத் கீதை மற்றும் புத்தகங்களை எடுத்துச் செல்ல அனுமதிக்குமாறு கெஜ்ரிவால் கோரிக்கை வைத்துள்ளார்.
என்னென்ன வசதிகள்?
டில்லி திகார் சிறையில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கிடைக்கவுள்ள வசதிகள்குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி,
* அவருக்கு மெத்தையுடன் கூடிய படுக்கை, காலை 6:30 மணிக்கு ‘டீ’ கொடுக்கப்படும்.
* இவரது சிறைக்கதவு சூரிய உதயத்திற்கு பின்னர் திறந்துவிடப்படும்.
* மதிய உணவுக் காலை 10:30 முதல் 11 மணிவரை வழங்கப்படும்.
* பகல் 12 மணி முதல் மாலை 3 மணிவரை சிறைக்கதவு மூடப்படும்.
* மாலை 3:30 மணிக்கு டீ, இரண்டு பிஸ்கட்கள் கொடுக்கப்படும்.
* மீண்டும் சூரிய மறைவுக்கு பின்னர் சிறைக்கதவு மூடப்படும்.: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை ஏப்.,15 வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கக் கோர்ட் உத்தரவிட்டது. இதனையடுத்து அவர் திகார் சிறையில் 2ம் எண் அறையில் அடைக்கப்பட்டார்.புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21ம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது. அவரை டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய அமலாக்கத்துறை, 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கக் கோரியிருந்தது. இதனையடுத்து ஏப்ரல் 1ம் தேதிவரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.
அமலாக்கத்துறையின் காவல் இன்றுடன் முடியும் நிலையில், இன்று ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அரவிந்த் கெஜ்ரிவாலை ஏப்.,15 வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு 2ம் எண் அறை ஒதுக்கப்பட்டது. சிறையில் பகவத் கீதை மற்றும் புத்தகங்களை எடுத்துச் செல்ல அனுமதிக்குமாறு கெஜ்ரிவால் கோரிக்கை வைத்துள்ளார்.
என்னென்ன வசதிகள்?
டில்லி திகார் சிறையில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கிடைக்கவுள்ள வசதிகள்குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி,
* அவருக்கு மெத்தையுடன் கூடிய படுக்கை, காலை 6:30 மணிக்கு ‘டீ’ கொடுக்கப்படும்.
* இவரது சிறைக்கதவு சூரிய உதயத்திற்கு பின்னர் திறந்துவிடப்படும்.
* மதிய உணவுக் காலை 10:30 முதல் 11 மணிவரை வழங்கப்படும்.
* பகல் 12 மணி முதல் மாலை 3 மணிவரை சிறைக்கதவு மூடப்படும்.
* மாலை 3:30 மணிக்கு டீ, இரண்டு பிஸ்கட்கள் கொடுக்கப்படும்.
* மீண்டும் சூரிய மறைவுக்கு பின்னர் சிறைக்கதவு மூடப்படும்.


