ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டே ஆக வேண்டும் – அமெரிக்கா எச்சரிக்கை!

Advertisements

ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டே ஆக வேண்டும் என்றும் அது ஒரு வழியில் இல்லையென்றால் மற்றொரு வழியில் திறக்கப்படும் என்றும் அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ 3 நாள் பயணமாக தனது மனைவியுடன் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு வருகைத் தந்தார். அப்போது, ஈரான் போர் விவகாரம் குறித்து அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ செய்தியாளர்களைச் சந்தித்து பேசியபோது, ஈரான் – அமெரிக்கா இடையே அமைதி ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் தொய்வுடன் நடைபெற்று வரும் சூழலில் ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டே ஆக வேண்டும் என்று தெரிவித்தார்.

 

ஹார்முஸ் ஜலசந்தி முடக்கத்தால்  இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் நெருக்கடியில் சிக்கியுள்ளன என்று கூறினார். இந்த நிலை நீடித்தால் பெரும் பொருளாதார நெருக்கடி உலக நாடுகளை பீடிக்கும் என்ற அச்சம் நிலவுகிறது என்றும் அமெரிக்காவுக்கும் இந்த விவகாரத்தை விரைந்து தீர்க்க நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது என்றும்  தெரிவித்தார்.

ஹார்முஸ் அருகே தெற்கு ஈரானில் அமைந்துள்ள பந்தர் அபபாஸ் நகரம் அருகே அமெரிக்க ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளதால் பேச்சுவார்த்தையில் தொய்வு ஏற்பட்டுள்ளது என்று கூறினார். உடன்பாட்டையை எட்டவே அதிபர் டிரம்ப் விரும்புவதாகவும் ஒரு நல்ல ஒப்பந்தத்தை மட்டுமே செய்வார் என்றும் குறிப்பிட்டார். ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டே ஆக வேண்டும். அது ஒரு வழியில் இல்லையென்றால் மற்றொரு வழியில் திறக்கப்படும்” என்று தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *