நேட்டோ நாடுகளின் பாதுகாப்புக்கு ரஷ்யா மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு

நேட்டோ நாடுகளின் பாதுகாப்புக்கு ரஷ்யா மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
நேட்டோ எனப்படும் வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த, 30 நாடுகள் இடம்பெற்றுள்ளன. ராணுவ ஒத்துழைப்புக்கான இந்த அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில், கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்யாவை பகிரங்கமாக சாடி பேசினார்.  உக்ரைன் மீதான போருக்குப் பிறகு, பிற நாடுகளையும் ஆக்கிரமிக்க ரஷ்ய அதிபர் புடின் நினைப்பதாக கூறினார்.
‘நேட்டோ’ அமைப்பின் மிகப்பெரிய  அச்சுறுத்தல்களில் ஒன்றாக ரஷ்யா இருப்பதாக தெரிவித்தார். மேலும், புடின் தவறாக வழிநடத்தப்படுவதாகவும், உக்ரைனுடனான போரை முடிவுக்கு கொண்டு வர ரஸ்ய அதிபர் புதின் முன்வர வேண்டும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *