
மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு உங்களின் இலக்குகளை அடைவதற்கு கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். பணியிடத்தில் பணிகள் அதிகமாகக் காணப்படும். அதனால் அதனைக் குறித்த நேரத்தில் முடிப்பதற்கு பணிகளைத் திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். துணையிடம் நல்லுறவை பராமரிக்க அமைதியாக நடந்து கொள்ள வேண்டும். பணவரவு திருப்தியாகக் காணப்படும். இதனால் பணத்தை அதிகமாகச் சேமிப்பீர்கள். உங்களின் ஆரோக்கியத்தில் எந்தப் பிரச்சனையும் ஏற்படாது.
ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு எந்தச் செயலையும் கவனமாகக் கையாள வேண்டும். பணியிடம் உங்களுக்கு ஏற்றதாக இருக்காது. அதனால் பணிகளைச் செய்யும் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அவ்வப்போது நீங்கள் கவனமாகச் செய்ய வேண்டும். உங்களின் துணையிடம் சண்டை ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் நீங்கள் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. வரவைவிடச் செலவுகள் அதிகமாக ஏற்படும். ஆரோக்கியத்தில் கண்களில் எரிச்சல் பிரச்சனை ஏற்படும்.
மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு பதற்றமான சூழ்நிலை ஏற்படும். பணியிடத்தில் வேலை அதிகமாகக் காணப்படும். அதனால் குறித்த நேரத்தில் பணிகளை முடிப்பதற்கு கஷ்டப்படுவீர்கள். துணையிடம் நல்லுறவு பராமரிக்கப்படும். செலவுகள் அதிகமாகக் காணப்படும். ஆரோக்கியத்தில் தாயின் உடல் நலத்திற்காகச் செலவு செய்ய நேரிடும்.
கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு சுமாரான நாளாக இருக்கிறது. பணியிடத்தில் உங்களின் செயலுக்கான அங்கீகாரம் கிடைக்கும். இதனால் மகிழ்ச்சியாகஇருப்பீர்கள் . துணையிடம் குழப்பமான மன நிலையை வெளிப்படுத்த வேண்டாம். வெளியில் பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் பணத்தை கவனமாகக் கையாள வேண்டும். ஆரோக்கியத்தில் கால் வலி பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.
சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு உங்களுக்குச் சாதகமான நாளாக இருக்கும். , நீங்கள் எதிலும் பொறுமையுடன் இருக்க வேண்டும். பணியிடத்தில் பணிகளை முடிப்பதில் மும்மரமாக இருப்பீர்கள்பணவரவு திருப்தியாகக் காணப்படும். இதனால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். துணையுடன் குழப்பமான சூழ்நிலை உண்டாகும். ஆரோக்கியத்தில் எந்தப் பிரச்சனையும் ஏற்படாது.
கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும். , உங்களிடம் தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும். பணியிடத்தில் உங்களின் செயலுக்கான அங்கீகாரம் கிடைக்கும். கணவன் மனைவி இடையே நல்ல புரிந்துணர்வு காணப்படும். பணப்புழக்கம் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு நீங்கள் மற்றவர்களுடன் பேசும்போது கவனமாகப் பேச வேண்டும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும். இதனால் சம்பள உயரவும் கிடைக்கும். துணையுடன் வெளிப்படையாகப் பேசுவீர்கள். இதனால் இருவருக்கிடையே நல்லுறவு பராமரிக்கப்படும். செலவுகள் அதிகமாகக் காணப்படும். இதனால் பணத்தை சேமிக்க முடியவில்லை என்று கவலை அடைவீர்கள். ஆரோக்கியத்தில் எந்தப் பிரச்சனையும் ஏற்படாது.
விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு எந்தச் செயலையும் பொறுமையாகக் கையாள வேண்டும். பணியிடத்தில் பணிகள் அதிகமாகக் காணப்படும். அதனால் பணிகளை முடிப்பதற்கு கஷ்டமாக இருக்கும். துணையிடம் நல்லுறவை பராமரிக்க அமைதியாக நடந்து கொள்ள வேண்டும். பணவரவு அதிகமாகக் காணப்படும். இதனால் பணத்தை சேமிப்பீர்கள். உங்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கிறது. , நீங்கள் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் கடின உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். துணையுடன் நல்ல புரிந்துணர்வு காணப்படும். பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மகரம்

மகரம் ராசிக்காரர்களுக்கு உங்களுக்குச் சாதகமான நாளாக இருக்கும். பணியிடத்தில் பணிகளைக் குறித்த நேரத்தில் முடித்துக் காட்டுவீர்கள். துணையிடம் உங்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவீர்கள். பணவரவு சிறப்பாகக் காணப்படும். இதனால் பணத்தை அதிகளவு சேமிப்பீர்கள். ஆரோக்கியத்தில் எந்தப் பிரச்சனையும் ஏற்படாது.
கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு உகந்த நாளாக இருக்காது. பணிகளில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் பணிகளைக் கவனமாகக் கையாள வேண்டும். துணையிடம் பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும். அப்போது தான் இருவருக்கிடையே நல்லுறவு பராமரிக்கப்படும். ஆரோக்கியத்தில் கண்களில் எரிச்சல் பிரச்சனை ஏற்படும்.
மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு உங்களுக்கு ஏற்ற நாளாகஇருக்காது. பணியிடத்தில் உள்ள சக பணியாளர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.துணையை வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்வீர்கள். இதனால் இருவரும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பணவரவு குறைவாகக் காணப்படும். இதனால் கவலை அடைவீர்கள். ஆரோக்கியத்தில் ஒவ்வாமை பிரச்சனை ஏற்படும்.


