Advertisements

எங்களை தொட நினைத்த அமெரிக்காவுக்கு தக்க பாடம் புகட்டியுள்ளதாக ஈரான் தலைவர் காமேனி தெரிவித்துள்ளார். இஸ்ரேல்-ஈரான் இடையே நடைபெற்று வந்த போர் அமெரிக்க அதிபர் டிரம்பின் தலையீட்டால் முடிவுக்கு வந்தது.
கடந்த 13 ஆம் தேதி, ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, ஈரானும் பதில் தாக்குதல் நடத்தியது. 10 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற இந்த போரில் ஈரானில் முக்கிய இராணுவ தளபதிகள் உயிரிழந்தனர்.
இஸ்ரேலில் மிகப்பெரிய மருத்துவமனை தாக்கப்பட்டது. இந்நிலையில் அமெரிக்கா ஈரானின் 3 அணு உலைகளை குறி வைத்து தாக்கியதை தொடர்ந்து, கத்தாரில் உள்ள அமெரிக்க விமானப் படைத்தளம் மீது பதில் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து அமெரிக்காவின் தலையீட்டால் ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்ததை ஏற்றுகொள்வதாக ஒப்புக்கொண்டன.
இந்நிலையில் போர் நிறுத்தத்திற்கு பிறகு பேசிய ஈரான் தலைவர் அயதுல்லா காமேனி அமெரிக்காவை கடுமையாக சாடினார். அமெரிக்காவின் முகத்திலேயே அறைந்ததாக கூறினார். மேலும், ஈரானை தொட நினைத்தால் அதிக விலை கொடுக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார்.
கத்தாரில் உள்ள அமெரிக்க விமானப் படைத்தளத்தை தாக்கி பதிலடி கொடுத்துள்ளதாகவும், எங்களை தொட நினைத்த அமெரிக்காவுக்கு, பாடம் புகட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Advertisements

