பாகிஸ்தான், வங்கதேச எல்லைகளில் ஊடுருவல் தடுக்கப்படும் : அமித் ஷா உறுதி.!

Advertisements

பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்துடனான எல்லைப்பகுதியை ஊடுருவ முடியாத வகையில் பாதுகாப்பானதாக மாற்றப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் நடைபெற்ற எல்லை பாதுகாப்பு படையின் முதல் இயக்குனர் ஜெனரலான ருஷ்தம்ஜியின் நினைவு சொற் பொழிவு நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது, நாட்டில் ஊடுருவியிருக்கும் ஒவ்வொரு ஊடுருவல்காரர்களையும் கண்டுபிடித்து அவர்களை இந்தியாவுக்கு வெளியே திருப்பி அனுப்புவோம் என்று தெரிவித்தார்.

பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்துடனான 6 ஆயிரம் கி.மீ. எல்லைப்பகுதியை ஊடுருவ முடியாத வகையில் பாதுகாப்பானதாக மாற்றப்படும் என்றும் இதற்காக ஸ்மார்ட் எல்லை திட்டம் அமல்படுத்தப்படும் என்றும் கூறினார். இந்த ஸ்மார்ட் திட்டத்துக்கு தொழில்நுட்பம் துணைபுரியும் என்றும் இது ஊடுருவ முடியாத ஒரு எல்லையை உருவாக்க உதவும் என்றும் குறிப்பிட்டார்.

இந்தியாவின் மக்கள் தொகை அமைப்பை செயற்கையாக மாற்றுவதற்கான சதிச்செயலை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் முறியடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *