
சமூக நீதி என பொய் வேடம் போட்டு மக்களை ஏமாற்றி, ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்காகவும், வாக்கு அரசியலுக்காகவும் சாதியை வைத்து பிழைக்கும் பழக்கம் தனக்கில்லை என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ் பாரதி பாப்பானுக்கு பதில் சொல்லமாட்டேன் என கூறியிருந்தார். இதற்கு பதிலடிகொடுக்கும் விதமாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தனது சமூக வலைத் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பாப்பானுக்கு பதில் சொல்ல மாட்டேன் என சொல்பவருக்கு முதலில் தனக்கு பதில் சொல்ல திராணி இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
சாதாரண குடும்பத்தில் பிறந்து, தளபதி மக்கள் இயக்கத்தில் சேவைகள் செய்து, தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர்களான தந்தை பெரியாரையும், அண்ணல் அம்பேத்கரையும், காமராஜரையும், உள்ளிட்டோரின் கொள்கைகளை தான் பின்பற்றி வருவதாகத் தெரிவித்துள்ளார். உங்களை போல தந்தை பெரியாரை வழிகாட்டி என்று சொல்லிக்கொண்டு, சமூக நீதி என பொய் வேடம் போட்டு மக்களை ஏமாற்றி ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்காகவும், வாக்கு அரசியலுக்காகவும் சாதியை வைத்து பிழைக்கும் பழக்கம் தனக்கில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
முதல்-அமைச்சர் விஜய் சாதி மதத்தை உடைத்து, உண்மையான சமூக நீதிப் பாதையில் ஆட்சியை அமைத்து, மக்கள் பணி செய்து வரும் நிலையில் அவரது வழியை தாங்களும் பின்பற்றுவதாகக் கூறினார். ஒரு குடும்ப ஆதிக்கத்துக்கு கொத்தடிமைகளாக வாழும் உங்களுக்கு முதலில் பதில் சொல்ல என்ன தகுதி இருக்கிறது என்று வினவியுள்ளார்.


