சாதனை படைத்த தமிழ்நாடு..2026 தேர்தலில் 4.71 கோடி பேர் வாக்களித்த சாதனை.!

தமிழக சட்டசபை தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி மொத்தம் 82.24 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. இந்நிலையில் தான் 2021, 2016ம் ஆண்டில் தமிழகத்தில் எவ்வளவு வாக்கு சதவீதம் பதிவாகி உள்ளது? மொத்த வாக்காளர்களில் எவ்வளவு பேர் வாக்களித்தனர்? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது. அமைதியான முறையில் பொதுமக்கள் தங்களுக்கு பிடித்த வேட்பாளர்களுக்கு வாக்களித்தனர்.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது. கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் ஆர்வமாக வந்து வாக்களித்தனர். மாலை 5 மணி நிலவரப்படி தமிழகத்தில் மொத்தம் 82.24 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளது.
இது முந்தைய தேர்தல்களை விட அதிகமாகும். தமிழகத்தில் தற்போது 5 கோடி 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 பேர் ஓட்டளிக்க உள்ளனர். இதில் 4.71 கோடி பேர் வாக்களித்துள்ளனர். இதற்கு முன்பு கடந்த 2011 சட்டசபை தேர்தலி்ல தமிழகத்தில் 78.01 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி இருந்தது.
அதுதான் அதிகப்பட்சமான ஓட்டு சதவீதமாக இருந்த நிலையில் தற்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இன்றைய தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *