பாமகவின் செயல் தலைவர் ஸ்ரீகாந்தி அன்புமணியை மறைமுக விமர்சனம்.!

ஒழுங்கான முன்னேற்ற அரசியல் என பேசுபவர்கள் இதனை தெரிந்து கொள்ள வேண்டும் என பாமகவின் செயல் தலைவர் ஸ்ரீகாந்தி அன்புமணியை மறைமுகமாக விமர்சனம் செய்தார்.

கடலூர் மாவட்டம், கண்ணாரப்பேட்டையில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், மாவட்ட செயற்குழுக் கூட்டம் செயல் தலைவர் ஸ்ரீகாந்தி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பாமக நிறுவனர் ராமதாஸ் உருவாக்கும் கூட்டணியை ஆட்சிக்கட்டிலில் அமர்த்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில், மாவட்ட செயலாளர்கள் கோபிநாத், ஜெகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து, செயல் தலைவர் ஸ்ரீகாந்தி செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.

அப்போது அவர், ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட்டேன், தற்பொழுது மீண்டும் செயல் தலைவராக அந்த பணியை தொடர்வேன் என்றார். தொடர்ந்து அவர், ஒழுங்கான முன்னேற்ற அரசியல் என பேசுபவர்கள் இதனைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

பின்னர், இது யாரை குறிப்பிட்டேன் என அவர்களுக்குத் தெரியும் என்று அன்புமணியை மறைமுகமாக விமர்சித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *