பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளத்தில் தேசியப் பொறியாளர்கள் தினத்தையொட்டி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் தலைசிறந்தப் பொறியாளர்களில் ஒருவர் என புகழப்படும் எம்.விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்த நாளையொட்டி 15 ஆம் தேதி தேசியப் பொறியாளர்கள் தினம் கொண்டாடப்படுகின்றன. இந்நிலையில், பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் தேசியப் பொறியாளர்கள் தினத்தையொட்டி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இந்த வாழ்த்து பதிவில், இந்தியாவின் பொறியியல் துறையில் ஒரு அழியாத முத்திரையைப் பதித்த எம்.விஸ்வேஸ்வரய்யாவுக்கு மணமார்ந்த நன்றிகளைக் கூறினார். இதைத்தொடர்ந்து, படைப்பாற்றல் மற்றும் உறுதிப்பாட்டின் மூலம், புதுமைகளைப் புகுத்தி, கடுமையான சவால்களைச் சமாளிக்கும் அனைத்து பொறியாளர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
இதையடுத்து, வளர்ச்சியடைந்தப் பாரதத்தை உருவாக்குவதற்கானக் கூட்டு முயற்சிகளில் நமது பொறியாளர்கள் தொடர்ந்து முக்கிய பங்கு வகிப்பார்கள் என்று கூறி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.



