
உக்ரைன் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளைத் தற்காலிகமாக ரஷ்யா நிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளது.
ரஷ்ய அதிபா் மாளிகையில், டிமித்ரி பெஸ்கோவ் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.
அப்போது அவர், உக்ரைன் உடனானப் போரைப் பேச்சுவார்த்தைகள் மூலம் நிறுத்த வாய்ப்பு உள்ளது என்றார். பின்னர், போா் நிறுத்த பேச்சுவாா்த்தைக்கு ரஷ்யா எப்போதுமே தயாராக உள்ளது எனக் கூறினார்.
இந்நிலையில், ஐரோப்பிய நாடுகள் பேச்சுவாா்த்தைகளில் தலையிட்டு முட்டுக்கட்டைப் போடுகின்றன.
இதனால், உக்ரைன் உடான போர் பேச்சுவார்த்தைகளைத் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது
என்று தெரிவித்தார்.


