அண்ணாவின் பிறந்த நாளையொட்டி ஸ்டாலின் மலர்தூவி மரியாதை..!

பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்குக் கீழ் உள்ள திருவுருவப் படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதனை தொடர்ந்து, துணை முதல்வர், அமைச்சர்களும் மரியாதை செலுத்தினர். இதனையடுத்து, தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதில், திராவிட முன்னேற்றக் கழகம் எனும் நம் உயிரைத் தாயென அளித்திட்ட திருமகன் என்றும் பேரறிஞர் அண்ணா தலைமகன் நிமிர்த்திய தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்!” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *