Advertisements
வடகிழக்கு பருவமழை எச்சரிக்கை தொடர்ந்து அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை மையத்தில் 250 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
வடகிழக்கு பருவமழை முன்னிட்டு தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு குழு நான்காம் படை பிரிவு மையத்தில் 25 பேர் கொண்ட 10 குழு வீரர்கள் என 250 வீரர்கள் உயிர்காக்கும் கருவிகள் மற்றும் மீட்பு பணிகளுக்கு தேவையான அனைத்து கருவிகளுடன் வாகனத்தில் தயார் நிலையில் உள்ளனர்.
மேலும் படை பிரிவின் சீனியர் கமாண்டன்ட் அகிலேஷ் குமார் தலைமையில் அவசரகால சிறப்பு குழுவினர் சென்னையில் உள்ள பேரிடர் மேலாண்மை மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்துடன் தொடர்பில் உள்ளனர்.தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டால் உடனடியாக அந்த மாவட்டத்துக்கு வீரர்கள் உடனடியாக அனுப்பி வைக்கப்படுவார்கள்.