இன்று நான்கு மாவட்டங்களில் கனமழை:வானிலை ஆய்வு மையம் தகவல்..!

இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடதமிழகம் தெற்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகளுக்கு இணையாகத் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலவுகிறது. இதன் காரணமாக இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் இடிமின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் தெரிவித்துள்ளது. இதனால், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கனமழை எச்சரிக்கை காரணமாக அணணா பல்கலைகழகம் மற்றும் சென்னை பல்கலைகழகங்களில் பருவத்தேர்வுகள் இன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *