ஜெட் ஏர்வேஸ் தலைவர் நரேஷ் கோயலின் ஆட்கொணர்வு மனுவைத் தள்ளுபடி செய்து மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வங்கிக் கடன்-பணமோசடி வழக்கில் அமலாக்க இயக்குநரகம் தன்னைக் கைது செய்தது சட்டவிரோதமானது என்று அறிவிக்கக் கோரி ஜெட் ஏர்வேஸ் தலைவர் நரேஷ் கோயல் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை மும்பை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ரேவதி மோஹித்-தேரே, கௌரி கோட்சே ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இந்த மனுவை ஏற்க முடியாது என்று தீர்ப்பளித்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ஜாமீன் மனு போன்ற பிற சட்ட ரீதியான தீர்வுகளைத் தொடர கோயலுக்கு விருப்பம் உள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. .
கடந்த மாதம் இந்த அமர்வு கோயல் மற்றும் அமலாக்கத் துறையுடன் விரிவான விசாரணைகளை இதற்கு முன்னர் அமர்வு நடத்தியது. கோயல் தனது மனுவில் அவரது கைது முறையற்றது, தேவையற்றது மற்றும் சரியான நடைமுறையைப் பின்பற்றி நடத்தப்படவில்லை என்றெல்லாம் வாதிட்டார். உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவுகளை கோயல் எதிர்த்தார். இதனையடுத்து அவரை அமலாக்கத் துறை காவலிலும் பின்னர் நீதிமன்றக் காவலிலும் வைத்தது நீதிமன்றம். கோயல் தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளார். 538 கோடி கனரா வங்கி சம்பந்தப்பட்ட ஊழல் வழக்கில் செப்டெம்பர் 1- ஆம் தேதி அமலாக்கத்துறை கைது செய்த்தது குறிப்பிடத்தக்கது. செப்டெம்பர் 14 -ஆம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் இருந்த அவர் பண பரிமாற்ற வழக்கிலும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு அவரது மனைவி உட்பட ஜெட் ஏர்வேஸ் மூலம் கனரா வங்கியில் மோசடி செய்தது குறித்தும் வழக்கு நடைபெற்று வரும் சூழலில் அவரது ஆட்கொணர்வு மனு தள்ளுபடி செய்து மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.