Jayakumar:ஓபிஎஸ் அதிமுக தொண்டர்களின் ரத்தத்தை குடித்த அட்டைப்பூச்சி!

சென்னை:இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற தமிழகத்தை சேர்ந்த வீரர்களில் முக்கியமான வீரராகத் திகழ்ந்தவர் மாவீரன் அழகு முத்துக்கோன். மாவீரன் அழகு முத்துக்கோனின் 314-வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.

சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் அருகே உள்ள சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் சிலைக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அவருடன் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, டி.ஜெயக்குமார், கோகுல இந்திரா, மூர்த்தி, அப்துல் ரகீம், விஜயபாஸ்கர், மாவட்டச் செயலாளர்கள் பாலகங்கா, வெங்கடேஷ்பாபு, சிட்லபாக்கம் ராஜேந்திரன், முன்னாள் எம்.பி. ஜெயவர்தன், முன்னாள் எம்.எல்.ஏ. வாலாஜாபாத் கணேசன், பரங்கிமலை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் பெரும்பாக்கம் ராஜசேகர், முன்னாள் கவுன்சிலர் சின்னையன், வடபழனி, சத்திய நாராயண மூர்த்தி உள்பட ஏராளமான நிர்வாகிகள் மகளிரணியினர் பங்கேற்று மரியாதை செலுத்தினார்கள்.

இதைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* அதிமுக-வை 90 சதவீதம் இணைத்துவிட்டதாகச் சசிகலா கூறுவது சோற்றில் முழு பூசணிக்காயை மறைப்பது போன்றது.

* கட்சிக்குத் துரோகம் செய்தவர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக தொண்டர்களின் இரத்தத்தை குடித்த அட்டைப்பூச்சி.

* அதிமுக தொண்டர்களின் ரத்தத்தை குடித்த அட்டைப்பூச்சி போன்ற ஓபிஎஸ்-ஐ மீண்டும் கட்சியில் சேர்க்க வாய்ப்பில்லை.

* அதிமுக எழுச்சியுடன் பயணித்து வருகிறது. அதிமுக பற்றித் தொடர்ந்து மாய கருத்தைச் சிலர் திட்டமிட்டு பரப்புகின்றனர்.

* அண்ணாமலை என்கிற வேதாளம் தற்போது எங்களை விட்டுவிட்டு செல்வப்பெருந்தகை மீது ஏறி இருக்கிறது என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *