மீண்டும் பக்தர்களுக்கு ஆசி வழங்கும் தெய்வானை!

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 18-ந் தேதி கோவில் யானை தெய்வானை தாக்கி யானை பாகன் உதயகுமார் மற்றும் அவரது உறவினர் சிசுபாலன் ஆகிய 2 பேர் உயிரிழந்தனர்.

சம்பவம் நடந்த 10 நாட்களாக அறையில் யானையைக் கட்டி வைத்து மருத்துவர்களின் முழு கண்காணிப்பிலிருந்து வந்தது.

இந்நிலையில் நேற்று 11-வது நாள் யானையை அறையிலிருந்து வெளியே கொண்டு வந்தனர். இதற்காக யானையை அதிகாலையிலே குளிப்பாட்டி நவதானிய உணவுகள் வழங்கப்பட்டது.

யானை விரும்பிச் சாப்பிடும் பச்சை நாற்று வகை புல் உணவாகக் கொடுக்கப்பட்டது. அதைத் தெய்வானை யானை ருசித்துச் சாப்பிட்டது.

முன்னதாக யானைக்காகக் கோவில் ஆனந்த விலாச மண்டபத்தில் சிறப்பு யாகசலை பூஜைகள் நடந்தது. யாகப் பூஜையில் வைக்கப்பட்ட கலத்தில் உள்ள புனிதநீர் கோவில் யானை தெய்வானை மீது தெளிக்கப்பட்டது. மேலும் யானை கட்டப்பட்டிருந்த அறைக்கும், சம்பவம் நடந்த இடத்திற்கும் புனிதநீர் தெளிக்கப்பட்டது. தற்போது யானை சகஜ நிலையில் இருப்பதாகவும் விரைவில் பக்தர்களுக்கு ஆசி வழங்க வரும் எனக் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *