இடைத்தேர்தலுக்காக வெறியோடு காத்துட்டிருக்கேன் : சீமான் பேட்டி.!

இடைத்தேர்தல் எப்போது வைப்பார்கள் என்று காத்து இருக்கிறேன், வெறியோடு இருக்கிறேன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியில் புதிதாக ஆயிரம் பேர் இணையும் நிகழ்ச்சி, பல்லாவரத்தில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் நா.த.க.வின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது, நடிகருக்கும், தலைவருக்கும் வித்தியாசம் தெரியாத தறுதலை கூட்டம், நடிகனிடம் ஆட்சியை கொடுத்துவிட்டார்கள். பிளாக்கில் டிக்கெட் விற்ற கூட்டம் எங்களை திரள்நிதி கூட்டம், திரள்நிதி திருடர்கள் என்கிறார்கள், இது மக்கள் இயக்கம்; மக்களிடம் இருந்துதானே பெறமுடியும், நீங்கள் வாக்குகளை மக்களிடம்தானே கேட்கிறீர்கள்;, நாங்கள் வாக்குகளையும் கேட்கிறோம்,

வலிமையையும் கேட்கிறோம் என்றும், திரள்நிதியில் ஒரு தேநீர்கூட அருந்தமாட்டோம் என்றும் நாம் தமிழர் சீமான் தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் 234-தொகுதிகள் இருக்கும்போது, பெரம்பூரில் மதம், திருச்சி கிழக்கில் சாதி மதம் காரணங்களுக்காக போட்டியிட்டுவிட்ட ஜோசப்விஜயால், எப்படி சாதி மதத்தை ஒழிக்க முடியும் என்று சீமான் கேள்வி எழுப்பினார்.

மேலும், லஞ்சம் கேட்டா கொடுக்காதீர்கள் என்று சொல்லக்கூடியவர், லஞ்சம் வாங்கினால் அவரை டிஸ்மிஸ் செய்வேன் என்று சொல்ல முடியவில்லை என்றும், ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீரை தருவதற்கு முன் வரும் மத்திய அரசு, நதிநீரை பெற்று தர ஏன் முன்வரவில்லை என்று கேள்வி எழுப்பிய அவர்,  இடைத்தேர்தல் எப்போது வைப்பார்கள் என்று காத்து இருக்கிறேன், வெறியோடு இருக்கிறேன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *