Narendra Modi: பிரதமர் மோடி பங்கேற்கும் பேரணிக்கு நீதிமன்றம் அனுமதி!

Advertisements

கோவை மாவட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் பேரணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதிவழங்கியுள்ளது.கோவை மாவட்டத்தில் பாதுகாப்பு காரணங்களால் காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் மீண்டும் அனுமதி வழங்கப்பட்டன.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி நாளை அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்னரே பாஜக, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலுக்கு விறுவிறுப்பாகத் தயாராகி வருகின்றன. பிரதமர் மோடியோ தமிழகத்தில் அதிக கவனம் செலுத்தி திருப்பூர், கோவை, நெல்லை, தூத்துக்குடி, சென்னை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பொதுக்கூட்டம் நடத்தி வருகிறார்.

அந்த வகையில் வருகின்ற 18ம் தேதி கோவையில் நடைபெறும் விழாவில் பங்கேற்க உள்ளார். அப்போது கோவை மேட்டுப்பாளையம் சாலை முதல் ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம்வரை ரோட் ஷோ என்று சொல்லக்கூடிய காரில் இருந்தபடியே மக்களைச் சந்தித்தவாறு பயணிக்கப் பாஜக சார்பில் காவல் துறையிடம் அனுமதி கோரப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் காவல் அதிகாரிகளுடன் மத்திய சிறப்பு பாதுகாப்பு படை எஸ்பிஜி குழுவினர் ஆலோசனை மேற்கொண்டனர். சுமார் 2 மணி நேரம்வரை இந்த ஆலோசனையானது நடைபெற்றது.
ஆலோசனைக்குப் பின்னர் பிரதமரின் பேரணிக்கு அனுமதி அளிக்கப்படவில்லையெனக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பேரணிக்கு அனுமதி கோரி கோவை மாநகர மாவட்ட பாஜக தலைவர் ஜி ரமேஷ் குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்த நிலையில்கோவை மாவட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் பேரணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதிவழங்கியுள்ளது. கோவை மாவட்டத்தில் பாதுகாப்பு காரணங்களால் காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் மீண்டும் அனுமதிவழங்கி உத்தரவுபிறப்பித்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *