புதுடில்லி: ‘காங்கிரஸின் அதிகபட்ச நேரம் உட்கட்சி சண்டையில் போய்விடுகிறது. அவர்களுக்கு அதுக்கே நேரம் பத்தவில்லை’ எனப் பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
90 இடங்களைக் கொண்ட ஹரியானா சட்டசபைக்கு வரும் அக். 01 ல் தேர்தல் நடக்கிறது. இங்கு மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்கப் பா.ஜ., வியூகம் வகுத்து வருகிறது. இந்நிலையில், இன்று(செப்.,26) ஹரியானா பா.ஜ., தொண்டர்களிடம் நமோ செயலிமூலம் பிரதமர் மோடி பேசியதாவது: காங்கிரஸ் கட்சி பலவீனமடைந்துள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் தோல்வி அடைந்து வருகிறது.
காங்கிரஸின் அதிகபட்ச நேரம் உட்கட்சி சண்டையில் போய்விடுகிறது. அவர்களுக்கு அதுக்கே நேரம் பத்தவில்லை. ஹரியானாவில் உள்ள மக்களுக்கு அவர்களின் உட்கட்சி மோதல்கள் தெரியும்.
கடின உழைப்பு
10 ஆண்டுகளாகப் பொது பிரச்னையிலிருந்து விலகி, குடும்ப நலனிற்காகச் செயல்பட்டு வருகிறது காங்கிரஸ். வாக்குச் சாவடியில் வெற்றி பெற்றவர் ஓட்டெடுப்பில் வெற்றி பெறுகிறார். பா.ஜ., வுக்கு சேவை செய்ய மேலும் ஒரு வாய்ப்பு அளிக்க ஹரியானா மக்கள் முடிவு செய்துள்ளார்கள்.
ஹரியானாவின் பழைய தலைமுறை தொண்டர்களாக இருந்தாலும் சரி, புதிய தலைமுறையினராக இருந்தாலும் சரி, அவர்களின் கடின உழைப்பும் விடாமுயற்சியும் எனக்கு எப்போதும் உத்வேகத்தை அளித்துள்ளது. மிகத் தீவிரமான விஷயத்தைக் கூட மிகவும் புத்திசாலித்தனமாக, நகைச்சுவைத் தொனியுடனும் செய்யும் திறன் அவர்களுக்கு உள்ளது. இதை ஹரியானாவிடமிருந்து மட்டுமே கற்றுக்கொள்ள முடியும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


