சட்டமன்றத்தில் பேசுவது சினிமா வசனம் அல்ல : விஜய்க்கு நயினார் நாகேந்திரன் தாக்கு!

சட்டமன்றத்தில் வசனம் பேசிக் கொண்டிருக்கும் ஜோசப் விஜய், தான் தமிழகத்தின் முதல்வர் என்பதை முதலில் உணர வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நகேந்திரன் தெரிவித்துள்ளார்.

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நகேந்திரன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், சென்னை அடையாறு அருகே, தவெக நிர்வாகியான கண்ணன் என்பவரை ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் காணொளி வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தலைநகரின் பொதுவெளியிலேயே இப்படி ஒரு கொடூரம் நடக்கிறது என்றால், தமிழகத்தின் மற்ற interior கிராமங்களில் சட்டம் ஒழுங்கின் நிலை எப்படியிருக்கும் என நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது என்று கூறியுள்ளார். மக்கள் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான எந்த நடவடிக்கையையும் எடுக்காமல், சட்டம் ஒழுங்கில் சிறப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தாமல், திங்கள் முதல் வெள்ளி வரை “9 to 5” என்ற கோட்பாட்டின் கீழ் மட்டுமே முதலமைச்சர் விஜய் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று குற்றம்சாட்டியுள்ளார்.
தொடர்ந்து சினிமாவைப் போல, சட்டமன்றத்தில் வசனம் பேசிக் கொண்டிருக்கும் ஜோசப் விஜய், தான் தமிழகத்தின் முதல்வர் என்பதை முதலில் உணர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் கையை அசைப்பது போலவும், பாட்டிக்குக் கண்ணாடி கொடுப்பது போலவும் ரீல்ஸ்களை எடுப்பதில் காட்டும் ஆர்வத்தையும் கவனத்தையும், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கின் மீதும் கொஞ்சம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *