
திருச்சி மற்றும் மதுரையில் புதிய டைடல் பூங்காக்கள் உருவாக்கப்படுவதன் மூலம் 10,500 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் உள்ள பஞ்சப்பூரில், பேருந்து நிலையத்திற்கு அருகில் 315 கோடி ரூபாய் மதிப்பில் 14.16 ஏக்கர் பரப்பில் டைடல் பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டினார். அதேபோல், மதுரையில் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகில் 289 கோடி ரூபாய் மதிப்பில் சுமார் 10 ஏக்கர் பரப்பில் டைடல் பூங்கா அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த இரண்டு டைடல் பூங்காக்களின் கட்டுமானத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் காணொளிமூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
🌟இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஏராளமான புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 7 திருக்கோயில்களில் முடிவுற்ற திட்டப்பணிகள் திறப்பு
🌟வணிகவரி & பதிவுத்துறை சார்பில் சேலம் மாவட்டம் காடையாம்பட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் சார்பதிவாளர் அலுவலகங்கள் திறப்பு
என இன்றைய நிகழ்வுகளின்… pic.twitter.com/V3LtjFqesU
— M.K.Stalin (@mkstalin) February 17, 2025
