பெட்டிகளில் கோடிக்கணக்கில் பணம்.! தவெக – வை அடித்து விரட்டிவிட்டோம்.!

தமிழக அரசியல் களத்தில் இப்போது எங்கு பார்த்தாலும் ஒரே ஒரு பேச்சுதான் அடிபடுகிறது. அதுதான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வாணியம்பாடி தொகுதி எம்.எல்.ஏ. சையத்  ஃபாரூக் பாஷா திருவண்ணாமலையில் நடைபெற்ற கட்சியின் பொதுக்கூட்டத்தில் ஒரு பரபரப்பான கருத்தை சொல்லியிருக்கிறார்..
எல்லோரும் சோபாவை பற்றி பேசுகிறார்கள்.. என்னையும் ஷாஜகானையும் தேடி வந்து கோடி கோடியாக பணம் கொடுத்து ‘அமைச்சர் பதவி கொடுக்குறோம். கையெழுத்து மட்டும் போடுங்கள்’ என தவெகவினர் கேட்டார்கள்..

நாங்கள் கோடிக்கு எல்லாம் சம்மதிக்க மாட்டோம்.. நாங்கள் கொள்கை சார்ந்தவர்கள் என சொல்லி அவர்களை விரட்டி விட்டோம் என்று ஓபன் – ஆக, பேசியது தற்பொழுது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது..இது குறித்த பின்னணி தகவல்களை தற்பொழுது விரிவாக பார்க்கலாம்..

2026 சட்டமன்ற தேர்தலில் தனித்து நின்று வெற்றி பெற்ற தவெக – விற்கு இடது சாரிகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்  கட்சிகள் ஆதரவு தந்து தற்பொழுது அமைச்சரைவையிலும் இடம்பிடித்துள்ளது.. இந்நிலையில் , கட்சியின் பொது கூட்டத்தில் பேசிய ஃபாரூக் பாஷா, அவர்கள் தன்னைத் தேடி வந்து தவெகவினர் பேரத்தில் ஈடுபட்டதாக வெளிப்படையாகப் பேசி இருக்காரு.. அதாவது  , “எல்லோரும் சோபாவைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், என்னையும் ஷாஜகானையும் தேடி வந்து கோடி கோடியாக பணம் கொடுத்து, ‘உங்களுக்கு எந்த அமைச்சர் பதவி வேண்டும்? உள்ளாட்சித்துறையா? போக்குவரத்துத்துறையா? சொல்லுங்கள், கையெழுத்து போடுங்கள்’ என்று லெட்டர் பேடை நீட்டினார்கள். ஆனால், நாங்கள் கோடிக்கும் பணத்திற்கும் விலைபோகிறவர்கள் அல்ல;

கொள்கைக்காக வாழும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தொண்டர்கள். அதனால் அந்தப் பணத்தை வாங்க மறுத்து அவர்களை அங்கிருந்து விரட்டிவிட்டோம்” என்று அவர் ஆவேசமாகத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தவெகவுடன் கூட்டணி அமைத்த பின்னணி குறித்தும் விளக்கமளித்தார்.

அதிமுகவை ஆட்சியில் அமர வைப்பதற்காக திமுக முயற்சி செய்ததாகவும், அதை எங்கள் கொள்கை ஏற்றுக்கொள்ளாத காரணத்தால்தான் நாங்கள் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறினோம். நாங்கள் ஆட்சியில் பங்கு கேட்கவில்லை; ஆனால் தவெக தானாக முன்வந்து கொள்கைக்காக எங்களை ஆதரித்து, அமைச்சர் பதவிகளையும் வழங்க முன்வந்தது” என்றார்.

மேலும், “தவெகவுக்கு ஆதரவு அளித்ததன் மூலம் ஷாஜகானுக்கு தற்போது அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஆதரவு கொடுத்த பிறகு எனக்கும் அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்று எங்கள் கட்சியின் தலைவர் கேட்டிருந்தார். விரைவில் அமைச்சருக்கு இணையான ஒரு பதவி எனக்கு வழங்கப்பட உள்ளது” என்றும் அவர் பகிரங்கமாகத் தெரிவித்தார்.

இந்நிலையில் , திமுக கூட்டணியிலிருந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக்  கட்சி விலகி தற்பொழுது தவெக – வோடு கைகோர்த்து அமைச்சரவையிலும் இடம்பிடித்துள்ள இந்நிலையில, தற்பொழுது இப்படி தவெக – வை குற்றம் சாட்டி இருப்பதற்கான நோக்கம் என்னவென்று தெரியவில்லை…

ஏற்கனவே தமிழக அரசியலில் “குதிரைப்பேரம்” மற்றும் “அமைச்சரவை பங்கு” குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், தவெகவின் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியின் எம்.எல்.ஏவே தங்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுக்க முன்வந்ததாக வெளிப்படையாகப் பேசியிருப்பது ஒட்டுமொத்த அரசியல் களத்தையும் அதிரவைத்துள்ளது.

எதிர்க்கட்சிகள் இந்தப் பேச்சைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி கேள்விகளை எழுப்பி வரும் நிலையில், சமூக வலைதளங்களில் ஃபாரூக் பாஷாவின் இந்தப் பேச்சு கடுமையான விவாதப் பொருளாகவும், தீயாய் பரவும் வைரல் செய்தியாகவும் மாறியுள்ளது. தமிழக அரசியலில் அடுத்தடுத்து என்னென்ன திருப்பங்கள் வரப்போகின்றன என்பதை இந்தப் பேச்சு மேலும் தீவிரப்படுத்தியுள்ளது என்றே சொல்ல வேண்டும்.

மேலும் , திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியதற்கான உண்மையான காரணத்தையும், தவெகவுடன் கைகோர்த்த பின்பு ஷாஜகானுக்குக் கிடைத்த அமைச்சர் பதவியையும், தனக்காகத் தலைவர் கேட்டுப்பெற்றிருக்கும் புதிய பொறுப்பையும் அவர் எந்தவித தயக்கமுமின்றி மேடையில் உடைத்துப் பேசினார்.

எதிர்க்கட்சிகள் எழுப்பி வரும் குதிரைப்பேர குற்றச்சாட்டுகளுக்கு நடுவே, சொந்தக் கூட்டணியின் எம்.எல்.ஏவே இப்படி வெளிப்படையாகப் பேசியிருப்பது தமிழக அரசியலில் பெரும் தீப்பற்ற வைத்துள்ளது. இணையத்தில் வைரலாகும் இந்த அதிரடிப் பேச்சு, வரவிருக்கும் தேர்தலுக்கான அனலை இப்போதே கூட்டியுள்ளது என்றே சொல்ல வேண்டும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *