
S. Regupathy | K Annamalai
ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற ரகுபதி, தற்போது ஊழல் தடுப்புத்துறை அமைச்சராக உள்ளாரென அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்...
புதுக்கோட்டை : புதுக்கோட்டையில் திருமயத்தில் இன்று(ஆகஸ்ட் 02) 6வது நாள் யாத்திரையை தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை மேற்கொண்டார். அப்போது, அவர் ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற ரகுபதி, தற்போது ஊழல் தடுப்புத்துறை அமைச்சராக உள்ளாரெனக் குற்றம் சாட்டினார்.
“என் மண், என் மக்கள்” நடை பயணத்தின் 5வது நாளான நேற்று(ஆகஸ்ட் 01) தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மேற்கொண்டார். புதுக்கோட்டையில் திருமயத்தில் இன்று(ஆகஸ்ட் 02) 6வது நாள் யாத்திரையை அண்ணாமலை மேற்கொண்டார்.அப்போது திறந்த வெளி வேனில் நின்று அண்ணாமலை பேசியதாவது:
ஜல்லிகட்டிற்கு பெயர் பெற்றது திருமயம். 2009ம் ஆண்டு திமுகவும், காங்கிரசும் சதி செய்து சீறி பாயும் காளைகளுக்குத் தடையை உருவாக்கினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.ஊழல் வழக்கில் தண்டனை பெற்றவர் ரகுபதி. அவர் தற்போது ஊழல் தடுப்புத்துறை அமைச்சராக உள்ளார். இதைவிட வெட்கக்கேடான விஷயங்களைப் பார்க்க முடியுமா?.சிறையில் இருந்தவர்களை சிறைத்துறை அமைச்சராக வைத்திருக்கிறோம்.
பிறந்த குழந்தைகளுக்குச் சத்தான உணவு வழங்க மத்திய அரசு கொடுத்த பணம் 2,907 கோடி ரூபாய் ஆகும். இந்தியாவில் அதிக கடன் வாங்கிய மாநிலமாகத் தமிழகம் இருந்து வருகிறது. இது தான் திமுகவின் ஆட்சி. 2வது சாதனை குடிக்காரர்கள் அதிக உள்ள மாநிலமாகத் தமிழகத்தை மாற்றி இருக்கிறார்கள். 5400 டாஸ்மாக் கடைகள் இருக்கிறது. எங்கே பார்த்தாலும் கூட ‛குடி… குடி….’ ன்னு இருக்கிறார்கள்.
S. Regupathy | K Annamalai |TASMAC | Corruption | Walkathon
டாஸ்மாக் அமைச்சர் சொல்கிறார், ‛ என் நண்பர்களைக் குடிகாரர்கள் என்று சொன்னால் டென்ஷன் ஆகிடுவேன்’ எனக் கூறுகிறார். தமிழக அரசுக்கு வருமானம் கொடுப்பவர்கள் என்று சொல்ல வேண்டும் என்கிறார்.எதிர்க்கட்சிகள் குள்ள நரி கூட்டத்தில் சேர்ந்து இருக்கிறார்கள். அடுத்தாண்டு நடைபெறும் லோக்சபா தேர்தலில் நான் போட்டியிடவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

