போர் ஹெலிகாப்டரில் பயணம் செய்த திரவுபதி முர்மு.!

Advertisements

உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட இலகுரக போர் ஹெலிகாப்டரில் இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பயணம் செய்தார்.

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சால்மரில் உள்ள விமானப் படைத்தளத்தில், உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட இலகுரக போர் ஹெலிகாப்டரான எல்சிஎச் பிரசாந்தில் இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பயணம் மேற்கொண்டார்.
இதுதொடர்பாக குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பார்வையாளர் புத்தகத்தில் எழுதியக் குறிப்பில், உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட இலகுரக போர் ஹெலிகாப்டரான எல்சிஎச் பிரசாந்தில் பறந்து சென்றது சிறந்த அனுபவத்தை அளித்தது என்றார்.
மேலும்,  இந்தப் பயணம் நாட்டின் பாதுகாப்புத் திறன் மீது ஒரு புதிய பெருமையை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து, இந்தப் பயணத்தை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்த இந்திய விமானப்படை மற்றும் ஜெய்சால்மர் விமானப் படைத்தளத்தின் குழுவுக்கு வாழ்த்துகள் என தெரிவித்தார்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *