அமெரிக்கா மறுத்தாலும் கச்சா எண்ணெய் கொள்முதல் நீடிக்கும் – மத்திய அரசு அதிரடி…..!

ரஷியா மீதான அமெரிக்காவின் தளர்வு இருக்கும் நிலையில் தொடர்ந்து அவர்களிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யப்படும் என்று பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணைச்செயலாளர் சுஜாதா சர்மா தெரிவித்துள்ளார்.

தில்லியில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணைச்செயலாளர் சுஜாதா சர்மா செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, ரஷியா மீதான அமெரிக்காவின் தளர்வு இருக்கும் நிலையில் தொடர்ந்து ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யப்படும் என்று தெரிவித்தார்.

நீண்ட கால ஒப்பந்தங்கள் மூலம் போதுமான அளவு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்று கூறினார். அமெரிக்க தடை விலக்கு கடந்த 16 ஆம் தேதி காலாவதியானது என்றும் மீண்டும் விலக்கு அளிக்க மறுத்தாலும், ரஷியாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *