
தென் அமெரிக்க கண்டம் அர்ஜெண்டினாவில் உள்ள 6962 மீட்டர் உயரம் உள்ள அக்கோன்காகுவா (Aconc Agua) சிகரத்தில் ஏறிச் சாதனை புரிந்து சென்னை திரும்பிய மலையேற்ற சாதனை பெண் முத்தமிழ்செல்விக்கு சென்னை விமான நிலையத்தில் மாணவர்கள், உறவினர்கள் உற்சாக வரவேற்புஅளித்தனர்,
விருதுநகர் ஜோகில்பட்டியை சேர்ந்த மலையேற்ற சாதனை தமிழ்பெண் சென்னை மண்ணிவாக்கத்தில் வசிக்கும் முத்தமிழ்செல்வி(34) நான்காவது சாதனை பயணமாகத் தென் அமெரிக்க கண்டம் அர்ஜெண்டினாவில் உள்ள 6962 மீட்டர் உயரம் உள்ள அக்கோன்காகுவா (Aconc Agua) சிகரத்த்தில் ஏறிச் சாதனை புரிந்துள்ளர்,
இவர் ஏற்கனவே உலகிலேயே அதிக உயரம்;
1,ஆசியா கண்டம் மவுண்ட் எவரெஸ்ட் சிகரம் 8848 மீட்டர்,
2.ஐரோப்பா கண்டம் மவுண்ட் எல்ப்ரஸ் சிகரம் 5642 மீட்டர்,
3.ஆப்பிரிக்க கண்டம் மவுண்ட் கிளிமஞ்சாரோ 5895 மீட்டர் என மூன்று கண்டங்களில் உள்ள உயரமான சிகரங்களை அடைந்துள்ளார்.
4.தென் அமெரிக்க கண்டம் அர்ஜெண்டினாவில் உள்ள 6962 மீட்டர் உயரம் உள்ள அக்கோன்காகுவா (Aconc Agua) சிகரத்த்தில் ஏறிச் சாதனை புரிந்துள்ளர்.(இது உலக அளவில் எவரெஸ்ட் சிகரத்திற்கு அடுத்து உயரம் அதிகமானது)
மலையேற்ற சாதனை தமிழ் பெண் முத்தமிழ் செல்விக்கு சென்னை விமான நிலையத்தில் படப்பை ஆல்வின் இண்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், உறவினர்கள், முக்கிய பிரமுகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர், சால்வைகளை போர்த்தியும், மலர்கொத்துகளை கொடுத்துச் சாதனை பெண்ணை வரவேற்றனர்,
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முத்தமிழ்செல்வி:- உலகின் ஏழு கண்டங்களில் உள்ள உயரமான சிகங்களை அடைந்து சாதனை புரிய திட்டமிட்ட நிலையில் தற்போது 4 வது சிகரத்தை அடைந்துள்ளேன்,
மிகவும் கடுமையான மைனஸ் 35 டிகிரி குளிர் கடும் காற்று, போதிய உணவு கிடைக்காமல் இந்தச் சாலையை முதல் தமிழராய் சாதனை ஏற்படுத்தியுள்ளேன்,
இந்தத் தகவல் அறிந்த தமிழக இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துகளைத் தெரிவித்தார், அதுபோல் அவரும் அமைச்சர் தங்கம் தென்னரசு, படப்பை மனோகரன் போன்றோர் நிதி உதவி வழங்கினார்கள் அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்,
மார்ச் மாதம் ஆஸ்திரேலிய, அதனைத் தொடர்ந்து வட அமெரிக்க என மூன்று சிகரங்களையும் ஏறி இந்த ஆண்டுக்குள் ஏழு கண்டங்களை ஏறிச் சாதனையை முழுமை செய்வேன் ,
வாழ்க்கையில் வெற்றி தவறவிட்ட சோர்ந்துவிட கூடாது நல்ல சாதனை மனிதர்களாகத் தங்களை மாற மீண்டும் மீண்டும் மெருகேற்றிகொள்ள வேண்டும், பெண்கள் நினைத்தால் யாருக்கும் பயப்படாமல் உலகையே சுற்றிவரலாம் சாதனை புரிந்து தங்களின் திறமையை வெளிகாட்டி மதிப்புமிகு வாழ்க்கை வாழலாம் என்றார்.

