
புதுடெல்லி:
டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட 14 நாட்களுக்குப் பிறகு அத்வானி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே.அத்வானி (98), வயது மூப்பின் காரணமாக அவ்வப்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த 12ம் தேதி அவருக்குத் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கிட்டத்தட்ட 14 நாட்களுக்குப் பிறகு, உடல் நலம் தேறிய நிலையில் நேற்றிரவு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
முன்னதாக மருத்துவமனையின் ஐசியூவில் அனுமதிக்கப்பட்ட அத்வானியை, நரம்பியல் நிபுணர் டாக்டர் வினீத் சூரி தலைமையிலான குழுவினர் கண்காணித்து சிகிச்சை அளித்து வந்தனர்.
கடந்த சில மாதத்திற்கு முன் அதாவது ஜூன் 26ம் தேதி இரவு திடீரென டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் சிறுநீரகவியல் துறையில் அத்வானி அனுமதிக்கப்பட்டார்.
அவரை டாக்டர் அம்லேஷ் சேத் தலைமையிலான குழுவினர் கண்காணித்து சிகிச்சை அளித்தனர். அடுத்த சில நாட்களில் அத்வானி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


