மயிலாப்பூரில் தமிழிசை போட்டி…எதிர்த்து நிற்கும் முன்னாள் அமைச்சர் வளர்மதி..! 

Advertisements
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவிட்டது.இன்னும் இரண்டு மாதங்களில் தேர்தல் நடைபெற இருக்கும் சூழ்நிலையில் பல்வேறு விஐபி தொகுதிகளில் போட்டியிடப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அந்தந்த தொகுதி மத்தியில் நிலவி வருகிறது.அந்த வகையில் மயிலாப்பூர் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிடப் போவதாகவும் அதேசமயம் அந்த தொகுதியை தனக்கு தர வேண்டும் என அதிமுக தரப்பில் முன்னாள் அமைச்சர் வளர்மதி குரல் கொடுப்பதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியே கசிந்து இருக்கின்றன.
தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் சென்னையில் உள்ள மயிலாப்பூர் தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்ற தொகுதி ஆகும். இங்கு கல்வி கற்றவர்களும் உயர் சாதியினரும் அதிக அளவில் வசிக்கிறார்கள் இந்த தொகுதியை பொருத்தவரையில் கட்சி பாகுபாடு இன்றி அதிமுக திமுக என இரு கட்சிகளும் மாறி மாறி வெற்றி தோல்விகளை சந்தித்து இருக்கின்றன.அந்த வகையில் மயிலாப்பூர் தொகுதியில் கடந்த காலங்களில் திமுக மற்றும் அதிமுக போலவே பாரதிய ஜனதா கட்சியும் தனக்கென தனிப்பட்ட வாக்கு வங்கியை பெற்றிருக்கிறது
அந்த வகையில் தமிழக பாஜக முன்னாள் தலைவரான தமிழிசை சௌந்தரராஜன் மைலாப்பூர் தொகுதியில் நிறுத்தப்படலாம் என தெரிகிறது.தமிழிசை சௌந்தரராஜனை பொருத்தவரையில் சென்னையில் ஏதாவது ஒரு தொகுதியை தர வேண்டும் என கேட்டு இருக்கிறார் ஆனால் அதே சமயத்தில் விருகம்பாக்கம் தொகுதியை பொருத்தவரையில் அதிமுகவுக்கு அதிக செல்வாக்கு இருக்கிறது அதேசமயம் வேளச்சேரி பாஜகவை பொறுத்தவரையில் உள்கட்சி பூசல்கள் இருக்கின்றன எனவே இந்த இரண்டு தொகுதிகளும் அல்லாமல் மயிலாப்பூர் தொகுதியில் அவர் போட்டியிடலாம் என முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக அதிமுக தரப்பில் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.ஆனால் அதே சமயம் மயிலாப்பூர் தொகுதியை பாரதிய ஜனதா கட்சிக்கு விட்டுத்தர அதிமுகவுக்கு மனம் இல்லை என்று சொல்லப்படுகிறது.இதற்கு காரணம் மயிலாப்பூர் தொகுதியை கேட்டு அதிமுகவில் ஏராளமான பிரபலங்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
குறிப்பாக முன்னாள் அமைச்சர் வளர்மதி தனக்கு மயிலாப்பூர் தொகுதியை ஒதுக்கி தர வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறார்.இது மட்டுமில்லாமல் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மகன்   ஜெய வர்த்தனும் இந்த தொகுதியை கேட்கிறார் மேலும் அதிமுக முக்கிய நிர்வாக ியான நிர்மலா பெரியசாமி முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் மாவட்ட செயலாளர் அசோக் என பலரும் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் தமிழிசை சௌந்தரராஜனுக்கு மயிலாப்பூர் தொகுதியை ஒதுக்கி தர முடியாது என அதிமுக தரப்பில் சொல்லப்படுகிறது மாறாக தென்மாவட்டங்களில் அவரை ஏதாவது ஒரு தொகுதியில் நீங்கள் நிறுத்துக் கொள்ளலாம் என அதிமுக தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.எனவே இது தொடர்பாக அதிமுக பாஜக இடையே குழப்பம் நிலவி வருகிறது என்பதும் முக்கிய செய்தியாக பார்க்கப்படுகிறது
இதனிடையே கமலஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மையக் கட்சியும் மயிலாப்பூர் தொகுதியை குறி வைத்திருக்கிறது இதற்குகாரணம் மக்கள் நீதி மையக் கட்சிக்கு மயிலாப்பூர் தொகுதியில் தனிப்பட்ட செல்வாக்கு இருக்கிறது எனவே மயிலாப்பூர் தொகுதியை பொருத்தவரையில் மக்கள் நீதி மையக் கட்சி சார்பாக முக்கிய விஐபி ஒருவர் போட்டியிடுவார் என தெரிகிறது.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *