டெஸ்ட் கிரிக்கெட்டில் புது சாதனை படைத்த ஆஸ்திரேலியா!

Advertisements

இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இலங்கையின் கலெவில் நடைபெற்று வருகிறது.

கடந்த 29-ம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா அணி முதலில் பேட் செய்தது. அதன்படி ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 654 ரன்களை குவித்தது.

இது ஆசிய மண்ணில் ஆஸ்திரேலியா அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் அடித்த அதிகபட்ச ஸ்கோர் ஆகியுள்ளது. ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா அதிகபட்சமாக 232 ரன்கள் ஸ்கோர் செய்தார். இந்தப் போட்டியில் இலங்கை 42 ஓவரில் 136 ரன்கள் ஸ்கோர் செய்துள்ளது.

இதற்கு முன்னர் பாகிஸ்தானை எதிர்த்து 1980 ஆம் ஆண்டு பசிலாபாத்தில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா எடுத்த 617 ரன்களே உச்சபட்சமாக இருந்த நிலையில் நீண்ட காலத்துக்குப் பிறகு தனது சாதனையை ஆஸ்திரேலியா முறியடித்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *