காரைக்குடியில் அண்ணாமலை -சீமான் போட்டி..!

Advertisements
தமிழக பாஜக முன்னாள் தலைவராக இருந்த அண்ணாமலை வருகிற சட்டமன்றத் தேர்தலில் காரைக்குடி தொகுதியில் போட்டியிடப் போவதாக பரபரப்பு தகவல் தெரிய வந்திருக்கிறது. முன்னதாக கோவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த அண்ணாமலை இந்த முறை காரைக்குடி தொகுதியில் போட்டியிட இருக்கிறார் இது பற்றி ஜெம்  தொலைக்காட்சி வழங்கும் சிறப்பு செய்தி தொகுப்பை இப்போது பார்க்கலாம்.
தமிழக அரசியலில் பாஜக என்ற மிகப்பெரிய புயலை கிளப்பியவர் அண்ணாமலை கர்நாடகாவில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றிய அண்ணாமலை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். கர்நாடகாவில் காவல்துறை அதிகாரியாக இருந்த போதும் தமிழ்நாட்டில் பாஜக தலைவராக இருந்த போதும் பல வெற்றிகளை சந்தித்தவர் அண்ணாமலை.
தற்பொழுது பாரதிய ஜனதா கட்சியைப் பொருத்தவரையில் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் நைனார் நாகேந்திரன் சுற்றுப்பயண பொறுப்பாளர்களை நியமித்திருக்கிறார்.இதில் காரைக்குடி உட்பட ஆறு தொகுதிகள் அண்ணாமலை வசம் தரப்பட்டிருக்கின்றன. இதில் முக்கியமாக காரைக்குடி தொகுதிக்கு அண்ணாமலை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதன் பின்னணியில் பல தகவல்கள் சொல்லப்படுகின்றன.
காரைக்குடியை பொறுத்தவரையில் வணிக சமூகத்தினர் மற்றும் தொழில் முனைவோர் அதிக அளவில் வசிக்கிறார்கள். இங்கு கல்வி கற்றவர்களும் கல்வி நிறுவனங்களும் ஏராளமாக இருக்கின்றன.வணிக மையமாக திகழும் காரைக்குடி தொகுதியில் பிரதமர் மோடியின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு அதிக அளவு ஆதரவு இருப்பதாக ஒரு கருத்துக்கணிப்பு உளவுத்துறை மூலம் டெல்லி பாஜக மேல் இடத்திற்கு தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் தற்பொழுது புதிதாக டெல்லி பாஜக மேல் இடத்தில் இருந்து தமிழக பாஜகவுக்கு ஒரு புதிய உத்தரவு பறந்து இருக்கிறது.அந்த வகையில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற வாய்ப்புள்ள தொகுதிகளை மிகச் சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதில் பாரபட்சம் தனிப்பட்ட விருப்பம் என எதையும் காட்டிக் கொள்ள வேண்டாம் நமக்கு வெற்றி முக்கியம் என உத்தரவு பறந்து இருக்கிறது.இதன்
அடிப்படையில் அண்ணாமலையை ஒரு நட்சத்திர வேட்பாளராக டெல்லி பாஜக மேலிடம் பார்க்கிறது. ஏற்கனவே கல்வி கற்றவர்கள் மத்தியில் அண்ணாமலைக்கு தனிப்பட்ட செல்வாக்கு இருக்கிறது.
இந்த அடிப்படையில் காரைக்குடி தொகுதியில் அண்ணாமலையை நிறுத்தினால் நிச்சயமாக அவர் வெற்றி பெறுவார் என டெல்லி பாஜக நம்புகிறது இதன் அடிப்படையிலேயே காரைக்குடி உட்பட ஆறு தொகுதிகளுக்கு அவரை முக்கிய பொறுப்பாளராக நியமனம் செய்திருக்கிறது என்கிறார்கள்.காரைக்குடி பொறுப்பாளராக அண்ணாமலை நியமிக்கப்பட்டு இருப்பதால் அந்த தொகுதி பற்றி அவர் முழுவதுமாக அறிந்து கொள்ள முடியும் என்பது பின்னணி திட்டமாக பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் கடந்த தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த அண்ணாமலை இந்த முறை காரைக்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுவார் என பாஜக நம்புகிறது.இதனிடையே நாம் தமிழர் கட்சியின் தலைவரான  சீமானும் காரைக்குடி தொகுதியில் போட்டியிடப் போவதாக ஒரு பேச்சு நிலவுகிறது.
இதற்கு காரணம் கடந்த பல தேர்தல்களில் காரைக்குடி தொகுதியில் நாம் தமிழர் கட்சி தொடர்ச்சியாக அதிக வாக்கு வங்கிகளை பெற்று வருகிறது. எனவே ஒருவேளை நாம் தமிழர் சீமான் காரைக்குடி தொகுதியில் போட்டியிடலாம் என தெரிகிறது.காரைக்குடி தொகுதியை பொருத்த வரையில் சீமானும் களமிறங்கினால் அந்த தொகுதியின் தேர்தல் வெற்றி மிகப் பரபரப்பாக காணப்படும் என்பது தற்போதைய செய்தியாகும்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *