Muthupet: அரசுப் பணி திட்டங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு!

Advertisements

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகள் முழுவதும் அரசால் வழங்கப்பட்ட புதிய கட்டிடங்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்பு விழா இன்று நடைபெற்றது.

இடையூர் ஊராட்சியில் 15 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு இன்று வழங்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து அரியலூர் கிராமத்தில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்ட நிலையில் இந்த நிகழ்வினை மாவட்ட கூடுதல் ஆட்சியர் பிரியங்கா அவர்கள் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.

இந்த விழாவில் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ். இடையூர் ஊராட்சி மன்ற தலைவர் ராதிகா கணேஷ் குமார். ஒன்றிய குழு உறுப்பினர். திமுக ஒன்றிய செயலாளர் மனோகரன். அரியலூர் ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன் ஒன்றிய குழு உறுப்பினர்.

யசோதா செல்வம் ஒன்றிய துணைச் செயலாளர் பி பாலசுப்ரமணியன் உள்ளாட்சி. சிபிஐ ஒன்றிய செயலாளர் உமேஷ் மற்றும் அரசுப் பிரதிநிதிகள் பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்துகொண்டு புதிய பள்ளி கட்டிடங்கள் மற்றும் அரசுப் பணி திட்டங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *