
வரும் காலங்களில் குற்றவியல் நடுவர் நீதிமன்றங்களில் இளம் வழக்கறிஞர்கள் புத்தகத்த வாசிப்பை பின்தொடர்ந்தால்தான் அவர்களின் செயல்பாடுசிறப்பாக இருக்கும் எனதிருவண்ணாமலை மாவட்ட தலைமை நீதிபதிமதுசூதனன் வழக்கறிஞர்களுக்குஅறிவுரை மற்றும் ஆலோசனைவழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஆற்காடு சாலையில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்குள் 1914ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பழமை மாறாத நீதிமன்ற கட்டிடத்தினை புணரமைப்பு செய்து மீண்டும் அக்கட்டிடத்தில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பழமை மாறாத கட்டிடத்தைத் திருவண்ணாமலை மாவட்ட தலைமை நீதிபதி மதுசூதனன் துவக்கி பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
அதனைத் தொடர்ந்து இது போன்ற ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பழமை மாறாத நீதிமன்ற கட்டிடத்தினை எவ்வித மாற்று கட்டமைப்பும் செய்யாமல் புனரமைப்பு செய்து மீண்டும் நீதிமன்ற பணிகள் நடைபெறும் கட்டிடமாக உருவானது பெருமைக்குறியதாகும் எனவும் அதே போல் வரும் காலங்களில் இளம் வழக்கறிஞர்கள் குற்றவியல் நீதிமன்றத்தில் சிறப்பாக வாதாட வேண்டுமென்றால் புத்தக வாசிப்பை தொடர்ந்தால் மட்டுமே அவர்களின் செயல்பாடு சிறப்பாக இருக்கும் என்று இளம் வழக்கறிஞர்களுக்கு அறிவுறுத்தினார்.
இளம் வழக்கறிஞர்கள் மட்டுமின்றி ஒவ்வொரு குடும்பத்திலும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை புத்தகம் வாசிப்பதை கட்டாயமாக்க வேண்டும் என நீதிபதி வேண்டுகோள் விடுத்தார்.
மனிதர்களுக்கு முக்கிய பங்காக விளங்கும் கல்வி மருத்துவம் மின்சாரம் ஆகியவை இருந்தால் மட்டுமே வாழ்க்கைக்கு போதுமானதாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
மேலும் எட்டு காவல் நிலையங்களில் உள்ள 2012 ஆண்டிலிருந்து நிலுவையில் உள்ள 1290 வழக்குகள் செய்யாறு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்
இந்நிகழ்வில் முன்னதாக மாவட்ட தலைமை நீதிபதி மதுசூதனுக்கு போலீசார் அணிவகுப்பு மரியாதை செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மற்றும் திருவண்ணாமலை காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மற்றும் கீழமை நீதிபதிகள் வழக்கறிஞர்கள் என ஏராளமான ஒரு கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கதாகும்.


