Murder: சொட்டு மருந்து கொடுத்து கொலை!

நண்பரின் தண்ணீர் பாட்டிலில் கண் சொட்டு மருந்து கொடுத்து கொலை செய்த பெண் குற்றவாளி..!

வௌகேஷா கவுண்டி நீதிமன்றத்தில் தீர்ப்பு அறிவிக்கப்பட்டபோது குர்செவ்ஸ்கி கண்ணீர் விட்டு அழுதார். விஸ்கான்சினைச் சேர்ந்த ஜெஸ்ஸி குர்செவ்ஸ்கி என்ற பெண், தனது நண்பரின் தண்ணீர் பாட்டிலில் ஆபத்தான அளவு கண் சொட்டு மருந்தைச் சேர்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார். இரண்டு நாட்கள் விசாரணைக்குப் பிறகு, 39 வயதான அவர் வேண்டுமென்றே கொலை மற்றும் திருட்டு உள்ளிட்ட அனைத்து குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

வௌகேஷா கவுண்டி நீதிமன்றத்தில் தீர்ப்பு அறிவிக்கப்பட்டபோது குர்செவ்ஸ்கி கண்ணீர் விட்டு அழுதார். கடந்த 2018-ம் ஆண்டு 62 வயதான லின் ஹெர்னன் என்ற மூதாட்டி மர்மமான முறையில் மரணமடைந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. குர்செவ்ஸ்கி இறந்த ஹெர்னன்  மூதாட்டீயை பல முறை ஏமாற்றி $300,000 டாலர் வரை கொள்ளையடித்துள்ளது தெரியவந்துள்ளது.

அக்டோபர் 3-ஆம் தேதி, 2018 -ல் ஹெர்னன் அவரது வீட்டில் சுயநினைவற்ற நிலையில் கிடந்ததைப் பார்த்து போலீசாருக்கு புகார் அளித்ததன் பேரில் அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட  போது அதிகப்படியான மாத்திரை உண்டதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து அவரது தோழி போல் அடிக்கடி அவர் வீட்டுக்கு வந்து சென்றவர்     குர்செவ்ஸ்கியின் மீது போலீஸ் விசாரணை விழுந்தது.

இந் நிலையில் மூதாட்டி இறந்து போனார். கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆன பின்வௌகேஷா கவுண்டி நீதிமன்றத்தில் அவரது உடற்கூறாய்வில் விஷம் கலந்த திரவம் அவர் உடலில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டதையடுத்து குர்செவ்ஸ்கி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு குற்றம் செய்ததாக ஒப்புக்  கொள்ளப்பட்டு 2021 ஜூன் மாதம் சிறையில் அடைத்தது. மறு விசாரணையின் போது குர்செவ்ஸ்கி குற்ற உணர்ச்சி மேலோங்க கண்ணீர் விட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *