
பெருங்களத்தூர் அருகே இரு சக்கர வாகன சாவியை தொலைத்த நண்பனைக் கொடூரமாகக் கொலை செய்த சக நண்பர்களைப் போலீசார் கைது செய்தனர்.
சென்னை, தாம்பரம் அடுத்த புது பெருங்களத்தூர் திருவள்ளுவர் நகர் பகுதியில் மர்ம நபர் ஒருவரை முகத்தைச் சிதைத்து கொடூரமாகக் கொலை செய்து இருப்பதாகப் பெருங்களத்தூர் பீர்க்கன்காரனை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப் பட்டது, தகவல் அடிப்படையில் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்ற போலீசார், இறந்தவரின் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு பொது மருத்துவ மனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.பின்னர் பிரேத பரிசோதனை முடிக்கப்பட்டு அவர்களது உறவினரிடம் உடலை ஒப்படைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழங்கும் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் சென்னை மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த காமேஷ் (வயது-24) என்பது பெயிண்டராக வேலை பார்த்து வந்தவர் எனத் தெரியவந்தது, இவரை யாராவது இங்கு அழைத்து வந்து அடித்துக் கொலை செய்துவிட்டு சென்றார்களா?அல்லது வேறு எங்காவது கொலை செய்யப்பட்டு இந்தப் பகுதியில் எடுத்து வந்து போட்டு விட்டுச் சென்றார்களா?என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தீவிரப் படுத்தினர்.
அதைத்தொடர்ந்து காமேஷின் நண்பரிடம் போலீசார் விசாரணை செய்ததில் வண்டலூர் பகுதியைச் சேர்ந்த லோகேஷ் (வயது-24) மற்றும் தயாகரன் (வயது-29) உட்பட மேலும் மூன்று நபர்களுடன் பெருங்களத்தூர் பகுதியில் மது அருந்தச் சென்றதாகத் தெரிவித்தனர்.
அதன்பிறகு லோகேஷ், மற்றும் தயாகரன் இருவரையும் பிடித்துக் காவல் நிலையம் அழைத்துச் சென்று முறைப்படி விசாரணை நடத்தினர், அப்போது போது ஞாயிற்றுக்கிழமை சுமார் நான்கு மணி அளவில் மது வாங்கிக் கொண்டு முடிச்சூர் வயல்வெளி அருகே அமர்ந்து மது அருந்தினோம், போதை தலைக்கு ஏறாததால் உடனே பெருங்களத்தூர் பகுதியில் கஞ்சா எளிதில் கிடைக்கும் என்பதால் கஞ்சா வாங்கிக் கொண்டு வந்து புகைத்து விட்டு வீட்டுக்குச் செல்லலாமென நினைத்தபோது ஒரு இருசக்கர வாகனத்தில் மூன்று நபர்கள் மட்டும் சென்று விட்டனர்.
அதன் பின்னர் லோகேஷின் இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் செல்வதற்காக இருசக்கர வாகனம் நிற்க வைத்த இடத்திற்கு சென்றபோது இருசக்கர வாகனத்தின் சாவியை காமேஷிடம் கொடுத்து வைத்துள்ளனர்.காமேஷ் சாவியை தொலைத்து விட்டதாகக் கூறியதும் லோகேஷ், தயாகரன் இருவரும் சேர்ந்து காமேஷ் தாக்கினர் அப்போது ஆத்திரம் அடைந்த காமேஷ் இருவரையும் தாக்கி உள்ளார்.
கஞ்சா போதையில் இருந்த லோகேஷ், தயாகர் இருவரும் சேர்ந்து அருகில் இருந்த கட்டையால் காமேஷ் சரமாரியாகத் தாக்கி முகத்தைச் சிதைத்து கொடூரமாகக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர் எனத் தெரியவந்தது, அதன் பிறகு இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.
கஞ்சா போதை தலைக்கு ஏறியதால் நண்பன் என்று பார்க்காமல் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை புறநகர் பகுதியான தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், அதன் சுற்றுவட்டார பகுதியில் அதிகளவு கஞ்சா விற்பனை ஆனது அமோகமாக நடைபெற்று வருவதால் உங்கள் கொலை சம்பவம் என அதிகரித்து வருகின்றது கஞ்சா விற்பனை செய்பவர்களை இரும்பு கரம் கொண்டு போலீசார் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கையும் வைத்துள்ளனர்.

